தூத்துக்குடி நேஷனல் பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. 100 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்ட இந்த முகாமில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு, தேர்வான இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வீரராகவ ராவ், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, “இதுகுறித்த வழக்கில் அரசு மேல் முறையீடு செய்துள்ளது. ஓடிடியில் மாஸ்டர் திரைப்படம் வெளியிடப்பட்டிருப்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் மட்டுமல்லாமல், விநியோகஸ்தர்களும் பாதிக்கப்படுவார்கள். இதனை முன்கூட்டியே அவர்கள் பேசி தீர்வு கண்டிருக்க வேண்டும்.
நீர் மேலாண்மையில் தமிழகம் முதன்மையாக உள்ளது. குடிநீர் பிரச்சினை என்பது தமிழகத்தின் தலைநகரத்தில் இருந்து குக்கிராமம் வரை எங்கும் இல்லை. இந்தியாவிற்கே உதாரணமாக சாலை கட்டமைப்பு வசதிகள் இங்குள்ளன. திமுக ஆட்சி காலத்தில் தமிழகம் இருண்டு இருந்தது. அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் தமிழகம் மின் மிகை மாநிலமாக உள்ளது. பிற மாநிலங்களுக்கு மின்சாரத்தை வழங்குகின்ற நிலையிலே தமிழகம் உள்ளது.
அதனால் தான் மக்கள் திமுகவை புறக்கணித்து அதிமுக ஆட்சி மீண்டும் வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதையெல்லாம் தெரிந்து கொண்டுதான் ஸ்டாலின் உங்கள் தொகுதி என்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். உங்கள் தொகுதி என்றால் எங்கள் தொகுதி என்று அர்த்தம்” என்றார்.
இதையும் படிங்க: 'பாமகவின் கூட்டணி குறித்த நிலைப்பாடு ஜனவரி 31 ஆம் தேதி முடிவு செய்யப்படும்'- பாமக தலைவர் ஜி.கே மணி