ETV Bharat / city

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு என தனி கொள்கைகள் விரைவில் அமல்படுத்தப்படும் - கீதா ஜீவன் - தூத்துக்குடி

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு என தனி கொள்கைகள் விரைவில் அமல்படுத்தப்படும் என சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

கீதா ஜீவன், Minister geetha jeevan, அமைச்சர் கீதா ஜீவன், மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன்
கீதா ஜீவன்
author img

By

Published : Nov 3, 2021, 3:47 PM IST

தூத்துக்குடி: தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் நேற்று (நவ. 2) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,"தமிழ்நாடு சமூக நலத்துறை பெண்கள், குழந்தைகள், முதியோர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது.

பெண்கள், குழந்தைகள், முதியோர்களின் பாதுகாப்பிற்காக மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டு சீரிய நோக்கிலான திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது.

சமூகநிலை மாற்றப்படும்

இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு சமூக நலத்துறை சார்பில் குழந்தைகள் பெண்கள், முதியோர்களின் பாதுகாப்புக்கென தனி கொள்கைகளை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர் சந்திப்பு

இதன் மூலம், சமூகத்தில் அவர்களின் தற்போதைய நிலை மாற்றப்படும். குறிப்பாக, குழந்தைகள் பாதுகாப்பு கொள்கைகளை பொறுத்தவரையில் குழந்தை உரிமை, கல்வி இடைநிற்றலை தடுத்தல், கல்வி உரிமை, சமூகப்பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக திட்டம் வெளியாகவுள்ளது. இதைப்போல, பெண்கள், முதியோர்களின் பாதுகாப்பு கொள்கைகளும் அமுல்படுத்தப்பட உள்ளன" என்றார்.

இதையும் படிங்க: விராட் குழந்தைக்கு பாலியல் மிரட்டல் - வெறுப்புணர்வாளர்களை மன்னியுங்கள் என ராகுல் காந்தி ட்வீட்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.