ETV Bharat / city

நாளை மறுநாள் தொடங்குகிறது மக்கள் நீதி மன்றம்! - மக்கள் நீதி மன்றம்

தூத்துக்குடி: மெகா லோக் அதாலத் என சொல்லப்படும் மக்கள் நீதி மன்றம் நாளை மறுநாள் தொடங்க உள்ளது, இதில் 5,000க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு காணப்படும் என மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

நீதிபதி
author img

By

Published : Jul 11, 2019, 8:06 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நாளை மறுநாள் லோக் அதாலத் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதுகுறித்து அம்மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் கூறுகையில், "தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழு, மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுக்களின் வழிகாட்டுதலின்படி லோக் அதாலத் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

லோக் அதாலத் என்பது இந்தியாவில் ஆண்டுக்கு நான்கு முறை நடத்தப்படும். அதன்படி இரண்டாவது முறையாக, நாளை மறுநாள் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதில் மோட்டார் வாகன வழக்குகள், சிவில், காசோலை மோசடி, குடும்ப நல வழக்குகள் உட்பட 5,000க்கும் மேற்பட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இதுவரையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சியின் மூலமாக உரிமை வழக்குகளில் 79 ஆயிரத்து 58 ஆயிரம் ரூபாய்க்கும், மோட்டார் வாகன இழப்பீடு வழக்குகளில் 1 கோடியே 12 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அளவுக்கு என மொத்தம் 1 கோடியே 91 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய்க்கு வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ளன. இவை தவிர தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் மூலமாக 210 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு அதில் 36 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

அதுபோல தாலுகா சட்டப்பணிகள் அமர்வுகளான கோவில்பட்டி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களில் நடைபெற்ற லோக் அதாலத் மூலமாக மொத்தம் 756 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டதில் 102 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

இதன் மூலமாக 80 ஆயிரத்து 93 ஆயிரம் ரூபாய்க்கு வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது. இதுவரை லோக் அதாலத் நிகழ்ச்சியின் மூலமாக மொத்தம் ரூ.2 கோடியே 72 லட்சத்து 91 ஆயிரம் அளவுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் நிலுவையில் இருந்த வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

லோக் அதாலத் நிகழ்ச்சியின் மூலம் தீர்வு காணப்படும் வழக்குகளுக்கு மேல் முறையீடு செய்ய முடியாது. மாணவர்கள் கல்விக் கடன் மீதான வழக்குகளில் வட்டித் தள்ளுபடி ஆகியவையும் எடுத்துக் கொள்ளப்படுவதால் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும். லோக் அதாலத் நிகழ்ச்சியில் 10 கோடி ரூபாய் அளவுக்கு வழக்குகள் தீர்வு காணப்படலாம். அதன்படி மாவட்டத்தில் 18 அமர்வுகள் மூலமாக வழக்கு விசாரணை நடத்தப்படும். இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் மூலம் எடுக்கப்பட்டுள்ளன" என்றார்.

மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விஸ்வநாதன் பேட்டி

Intro:தூத்துக்குடி மாவட்டத்தில் மெகா லோக் அதாலத்: 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும் - மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விஸ்வநாதன் பேட்டிBody:தூத்துக்குடி மாவட்டத்தில் மெகா லோக் அதாலத்: 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும் - மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விஸ்வநாதன் பேட்டி

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நாளை மறுநாள் லோக் அதாலத் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிப்பதற்காக தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின் பேரிலும், மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின் பெயரில் லோக் அதாலத் நிகழ்ச்சி இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி நாளை மறுநாள் தூத்துக்குடி மாவட்டத்தில் மெகா லோக் அதாலத் நடைபெற உள்ளது. இந்த லோக் அதாலத் நிகழ்ச்சியில் வங்கி சம்பந்தப்பட்ட வழக்குகள், மோட்டார் வாகன வழக்குகள், சிவில் வழக்குகள், செக் மோசடி வழக்குகள், குடும்ப நல வழக்குகள் உள்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட உள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் லோக் அதாலத் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது. இந்த நிலையில் 4 மாதங்கள் கழித்து மெகா லோக் அதாலத் நிகழ்ச்சி நாளை மறுநாள் தூத்துக்குடியில் நடைபெற உள்ளது. மெகா லோக் அதாலத் என்பது இந்தியாவில் ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படும் அதன்படி இரண்டாவது முறையாக நாளை மறுநாள் இந்த மெகா லோக் அதாலத் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இதுவரையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சியின் மூலமாக உரிமைகள் வழக்குகளில் 79 ஆயிரத்து 58 ஆயிரம் ரூபாய்க்கும், மோட்டார் வாகன இழப்பீடு வழக்குகளில் 1 கோடியே 12 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அளவுக்கு என மொத்தம் 1 கோடியே 91 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய்க்கு வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ளது. இவை தவிர தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் மூலமாக 210 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு அதில் 36 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதுபோல் தாலுகா சட்டப்பணிகள் அமர்வுகளான கோவில்பட்டி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களில் நடைபெற்ற லோக் அதாலத் மூலமாக மொத்தம் 756 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டதில் 102 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதன் மூலமாக 80 ஆயிரத்து 93 ஆயிரம் ரூபாய்க்கு வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது. இதுவரை லோக் அதாலத் நிகழ்ச்சியின் மூலமாக மொத்தம் ரூ. 2 கோடியே 72 லட்சத்து 91 ஆயிரம் அளவுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் நிலுவையில் இருந்த வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

லோக் அதாலத் நிகழ்ச்சியின் மூலம் தீர்வு காணப்படும் வழக்குகளுக்கு மேல் முறையீடு செய்ய முடியாது. நாளை மறுநாள் நடைபெற உள்ள தேசிய அளவிலான லோக் அதாலத் நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் கல்விக் கடன் மீதான வழக்குகளில் வட்டி தள்ளுபடி ஆகியவையும் எடுத்துக் கொள்ளப்படுவதால் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். நாளை மறுநாள் நடைபெறும் லோக் அதாலத் நிகழ்ச்சியின் மூலமாக 10 கோடி ரூபாய் அளவுக்கு வழக்குகளுக்கு தீர்வு காணப்படலாம். லோக் அதாலத் நிகழ்ச்சி மாவட்டத்தில் 18 அமர்வுகள் மூலமாக வழக்கு விசாரணை நடத்தப்பட்டு தீர்வுக்காணப்படும். லோக் அதாலத் நிகழ்ச்சி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் மூலம் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

பேட்டியின்போது ஒன்றாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சிவஞானம், மக்கள் நீதிமன்ற நீதிபதி முருகேசன், மகிளா நீதிமன்ற நீதிபதி குமார சரவணன், மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி ஹேமா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி சாமுவேல் பெஞ்சமின் ஆகியோர் உடனிருந்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.