ETV Bharat / city

'புதுமைப்பெண்' என்ற திட்டத்தின் மூலம் பெண் பிள்ளைகளை கையேந்தும் நிலைக்குத்தள்ளிவிட்டனர் - சீமான் - Stalin

1000-ரூபாய்க்கு கையேந்தும் நிலையில் பெண்களைக் கொண்டுபோய்விட்டுவிட்டு, அதற்கு புதுமைப்பெண் என்று திட்டம் கொண்டு வருவது வேடிக்கையாக உள்ளது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

'புதுமை பெண்' என்று திட்டம் கொண்டு வருவது வேடிக்கையாக உள்ளது- சீமான்

author img

By

Published : Sep 6, 2022, 8:02 PM IST

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் மகன் முடி காணிக்கை செலுத்துதல் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அவர், பணிகளை முடிவடைந்த நிலையில் இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னை புறப்பட்டுச்சென்றார்.

அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ”புதுமைப்பெண்ணின் வடிவம், உருவமானது கணவர் இறந்தவுடன் மூலையில் போய் உட்காராமல் கண்ணீர் வடிக்காமல் வேலுநாச்சியார் போன்றோர் படையைத் திரட்டி மண்ணுக்கு போராடியதின் வடிவம். அத்தகையது தான் உண்மையான புதுமைப்பெண்ணின் அடையாளம்.

முதலமைச்சர் கொண்டு வந்துள்ள புதுமைப்பெண் திட்டம் என்பது வறுமைக்கு 1000-ரூபாய்க்கு கையேந்தும் நிலையில் பெண்களைக் கொண்டுவந்துவிட்டு, அதற்க் இப்படி ஒரு பெயர் வைத்திருப்பது தான் வேடிக்கையாக உள்ளது.

இதையெல்லாம் பார்க்க வேண்டாம் என்று தான் அன்றே பாரதியார் மரித்துவிட்டார். புதுமைப்பெண் திட்டத்தினை எங்கள் பிள்ளைகளுக்கு இந்த நிலை வந்துவிட்டதே என்று வேதனையும், வலியுமாகப் பார்க்கின்றோம்.

புதுமைப்பெண் திட்டத்திற்கு ரூ.696-கோடி செலவு செய்வதற்குப் பதில் அரசுப்பள்ளி, கல்லூரி கட்டடங்களை தரம் உயர்த்தி கல்வியின் தரத்தினை உயர்த்தினால் பிள்ளைகள் நல்ல கல்வியை கற்றும் நல்ல வேலைக்குச் சென்று சம்பாதித்தும் யாரையும் சார்ந்து வாழாமல் செல்வதுதான் உண்மையான புதுமைப்பெண்ணுக்கு அர்த்தம்' என்றார்.

சீமான் பேட்டி

மேலும் 'முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ள புதுமைப்பெண் திட்டத்தினை ரசிக்கலாம். தனியே சென்று சிரிக்காலம். அவ்வளவுதான். ஆனால் அந்த 1000-ரூபாயை வைத்து ஒரு கியாஸ் சிலிண்டர் கூட வாங்க முடியாது என்பதுதான் உண்மை. ஏனென்றால் அதற்கும் 150-ரூபாய் குறைவாக உள்ளது.

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு விவகாரத்தில் நீதி கிடைக்கவில்லை என்று மாணவியின் பெற்றோர் கூறும் கருத்துதான் எங்கள் கருத்தும், ஸ்ரீமதி வழக்கு விசாரணையில் நீதிபதி தற்கொலை என்று தீர்ப்பு அளித்துவிட்டார். அதைப்போல் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடுவதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் நீதி கிடைக்கவில்லை என்று பெற்றோர்கள் கூறுவது உண்மைதான். அதிமுக கட்சி நிலவரம் தற்போது கலவரமாக உள்ளது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிக்கல்வித்துறையில் ஃபெயில் மார்க் வாங்கியுள்ளார் - ஜெயக்குமார் தாக்கு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.