ETV Bharat / city

பொறியியல் மாணவர்களுக்கான ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர் உச்சி மாநாடு!

author img

By

Published : Sep 20, 2019, 9:05 PM IST

தூத்துக்குடி: கோவில்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர் உச்சி மாநாடு இன்றிலிருந்து வரும் செப்டம்பர் 22ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது.

ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர் மாநாடு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் கே.ஆர்.இன்னோவேஷன் சென்டர், என்.இ.சி.பிசினஸ் இன்குபேட்டர் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்தும் பொறியியல் மாணவர்களுக்கான ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர் உச்சி மாநாடு இன்றிலிருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறயிருக்கிறது.

கோவில்பட்டி தனியார் பொறியியல் கல்லூரியில் தொழில்முனைவோர் உச்சி மாநாடு

இதில் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைப்பு உதவியுடன் நடைபெறும் இவ்விழாவில் கல்லூரி இயக்குநர் முனைவர் எஸ்.சண்முகவேல், கல்லூரி முதல்வர் கே.காளிதாஸ முருகவேல், என்.இ.சி.- பிசினஸ் இன்குபேட்டரின் தலைமை நிர்வாக ஆலோசகர் ஜி.வினோத், ஓ.ஹெச்.ஓ அகாடமியின் நிர்வாக இயக்குநர் வித்யாசாகர் கணேஷ், எஸ்ஏபி பி2 ஆலோசகர் எழில், சிங்கப்பூர் வியாசகா தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் வள்ளுவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் மாநாட்டின் இரண்டாவது நாளான நாளை ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர் மாநாடும், தொழில்நுட்பங்களைப் பற்றி பல்வேறு நிபுணர்களின் விரிவுரை அமர்வுகளும் நடைபெற உள்ளன.

இதையும் படியுங்க:

வேளாண்மைக் கல்லூரியில் ரூ.19.37 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் - முதலமைச்சர் திறந்து வைப்பு!

"பொறியியல், பார்மசி கல்லூரிகளுக்கு 2 ஆண்டுகள் அனுமதி கிடையாது"- அகில இந்திய தொழில் நுட்ப கல்விக்குழு

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரி கின்னஸ் சாதனை!

Intro:கோவில்பட்டி தனியார் பொறியியல் கல்லூரியில் ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர்
உச்சி மாநாடுBody:

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, நேஷனல் பொறியியல் கல்லூரி, கே.ஆர்.இன்னோவேஷன் சென்டர், என்.இ.சி.பிசினஸ் இன்குபேட்டர் நடத்தும் ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர் உச்சி மாநாடு இன்று தொடங்கி 3 நாட்கள் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைப்பு உதவியுடன் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவிற்கு கல்லூரி இயக்குநர் முனைவர் எஸ்.சண்முகவேல் மற்றும் கல்லூரி முதல்வர் கே.காளிதாஸ முருகவேல் ஆகியோர் தலைமை வகித்தனர். மூன்றாம் ஆண்டு மாணவி எஸ்.ஐ.ஜெனிபா வரவேற்புரை நிகழ்த்தினார்.
இன்று கல்லூரி கலையரங்கில் ஸ்டார்ட்அப் தொழில்முனைவோருக்கான பயிற்சிப் பட்டறை பொங்கு வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் என்.இ.சி.-பிசினஸ் இன்குபேட்டரின் தலைமை நிர்வாக ஆலோசகர் முனைவர் ஜி.வினோத் ஆகியோரால் நடத்தப்பட்டது.
இதில் இந்தியா முழுவதிலுமிருந்து சிந்தனையாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், மாணவர்கள், தொழில்முனைவோர்கள், பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் பெரும் தொழில் நிறுவனர்கள் என இருநூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேலும் சென்னை, ஓ.ஹெச்.ஓ அகாடமியின் நிர்வாக இயக்குநர் வித்யாசாகர் கணேஷ், எஸ்ஏபி பி2 ஆலோசகர், எழில், சிங்கப்பூர், வியாசகா தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் வள்ளுவன் ஆகியோர் இப்பயிற்சிப் பட்டறைக்கு சிறப்பு பயிற்றுனராக செயல்பட்டனர்.
மாநாட்டின் இரண்டாவது நாள், நாளை (சனிக்கிழமை) மாநாட்டின் தொடக்க விழா, ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர் மாநாடு மற்றும் போட்டிகள் நடைபெறுகிறது.
மேலும் மாநாட்டின் மூன்றாம் நாள், செப்டம்பர் 22, 2019 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பற்றி பல்வேறு நிபுணர்களின் விரிவுரை அமர்வுகளும், நடைபெறுகிறது. இறுதியில் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது
இந்த உச்சி மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கே.ஆர்.கல்வி நிறுவங்களின் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், கல்லூரி இயக்குநர் மற்றும் முதல்வர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி தலைவர், என்.இ.சி.பிசினஸ் இன்குபேட்டர், முனைவர் கே.மணிசேகர் மற்றும் பொங்கு வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் என்.இ.சி. பிசினஸ் இன்குபேட்டரின் தலைமை நிர்வாக ஆலோசகர் முனைவர் ஜி.வினோத் ஆகியோர் அனைத்து நடவடிக்கைகள், திட்டங்கள் மற்றும் மாநாட்டின் ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.