ETV Bharat / city

தலை தீபாவளி உபசரிப்பு - சுடச்சுடத் தயாராகும் பலகாரங்கள் - தலை தீபாவளி உபசரிப்பு

தூத்துக்குடியில் தலை தீபாவளி உபசரிப்புக்காக வீடுகளில் சுடச்சுடத் தயாராகும் பலகாரம் விற்பனை குறித்த தொகுப்பு...

சுட சுட தயாராகும் பலகாரங்கள்
சுட சுட தயாராகும் பலகாரங்கள்
author img

By

Published : Nov 2, 2021, 10:48 PM IST

தூத்துக்குடி: தீபாவளி, உலகம் முழுதும் உள்ள மக்களால் மொழி, இனம், நாடு கடந்து மகிழ்ச்சியின் வெளிப்பாடாக கொண்டாடப்படுகிறது.

தவத்தின் பலனால் பெற்ற வரத்தைக் கொண்டு மண்ணுலகையும் விண்ணுலகையும் அச்சுறுத்தி வந்த நரகாசுரனை பரமாத்மா விஷ்ணு, கிருஷ்ணர் அவதாரம் எடுத்து அழித்த நாளையே நாம் தீபாவளி பண்டிகையாக கொண்டாடுகிறோம் என்கிறது இந்து சாஸ்திரம்.

பொதுவாக மக்களிடையே இருக்கும் தீய எண்ணங்களான அழுக்கு, பொறாமை, கோபம், வஞ்சம், ஊறு விளைவித்தல், கேடு செய்தல், புறம்பேசுதல், பழிவாங்குதல் உள்ளிட்ட செயல்களால் இருண்டு கிடக்கும் வாழ்விலிருந்து, மீண்டு
மகிழ்ச்சியை மலரச் செய்ய ஒளியேற்றி, இறைவனை வழிபடும் நாளே தீபாவளிப் பண்டிகை என அறியப்படுகிறது.

அன்பையும், மகிழ்ச்சியையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வதே தீபாவளிப் பண்டிகையின் முக்கியத்துவம். அதன் வெளிப்பாடாகவே தீபாவளிப் பண்டிகை என்றதும் நம் வீடுகள் தோறும் ஒருவருக்கு ஒருவர் இனிப்பு பலகாரங்களை பரிமாறி, தங்களது அன்பை வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.

மேலும் வாழ்வில் இன்பத்தை வரவேற்க புத்தாடைகள் அணிந்தும் குதூகலிப்பர்.

வெறும் கொண்டாட்டத்திற்காக மட்டும் பண்டிகைகள் உருவாக்கப்படவில்லை. பண்டிகையைச் சார்ந்து பல தொழில்கள் வளர்ச்சி அடையவும் அவை உருவாக்கப்பட்டன என்பதே உண்மை. தீபாவளிப் பண்டிகையின் சிறப்பு பலகாரங்கள் தான். முறுக்கு, அதிரசம், தட்டை, முந்திரி கொத்து, வடை என விதவிதமான பலகாரங்களைச் செய்து வீதி எங்கும் கடைகள்தோறும் அடுக்கி விற்பனைக்காக வைத்திருப்பர்.

உற்சாகம் தரும் நாள்

தீபாவளி அன்று பூஜையில் முக்கிய இடம் பிடிப்பது பலகாரங்கள்தான் என்பதால், பலகாரங்கள் செய்யும் தொழிலில் ஈடுபடுவோருக்குத் தீபாவளிப் பண்டிகை தான் விடியல் தரும் பண்டிகையாக அமையும்.

இதை சார்ந்து பேக்கரி, நடைபாதைக் கடைகள், தினக்கூலியினர் எனப் பல சிறு,குறு தொழில்கள் செய்வோருக்கும் இந்த பண்டிகை மகிழ்ச்சி தரும் பண்டிகையாக இருக்கும்.

குழந்தைகளுக்குக் கொண்டாட்டம் என்றால், அது பண்டிகைகளைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது. அதுபோலவே தலை தீபாவளி கொண்டாடுவோருக்கும் இந்தப் பண்டிகை மிகுந்த உற்சாகத்தைத் தரும். திருமணம் முடிந்து புதுமணத் தம்பதியராய் பெண் வீட்டில் தலை தீபாவளியைக் கொண்டாடும் புது மாப்பிள்ளையின் உற்சாகத்தை அவரின் மிடுக்கும், பளபளப்புமே காட்டிக்கொடுத்து விடும்.

தலை தீபாவளி சிறப்பு

இப்படியாக தூத்துக்குடியில் தன் பேத்தியின் தலைதீபாவளி விருந்துக்காக பார்த்து, பார்த்து பலகாரங்களை செய்து கொண்டிருந்த தனலட்சுமியிடம், தலை தீபாவளி சிறப்பு குறித்து கேட்டோம். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள் எனக்கூறி தன் பேச்சைத் தொடங்கிய அவர், "பேத்தி திருமணம் செய்து கொடுத்த கையோடு அவளுக்கு செய்ய வேண்டிய சீர்களையும் கடமைகளையும் தவறாது செய்து வருகிறோம்.

சுடச் சுடத் தயாராகும் பலகாரங்கள்

அந்த வகையில் வரும் தீபாவளி எனது பேத்திக்கு தலை தீபாவளி என்பதால் வீட்டிற்கு வரும் பேத்தியையும் மாப்பிள்ளையையும் உபசரிக்க முறுக்கு, அதிரசம், தட்டை, முந்திரிக்கொத்து போன்ற பலகாரங்களை தயார் செய்து வருகிறேன்.

தலை தீபாவளிக்கு அவர்களின் வருகையை மிகவும் எதிர்பார்க்கிறேன். இந்த தீபாவளி அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் தீபாவளியாக அமைய வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: தீபாவளி பண்டிகை: 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.