தூத்துக்குடி: தென்மேற்கு பருவமழை தொடங்கி மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக குற்றால சீசன் களைகட்டியுள்ளது. அதன் தாக்கம் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 வாரத்துக்கு மேலாக வானம் மேகமூட்டமும் காணப்பட்டு அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது.
இந்த நிலையில் பிற்பகலில் திடீரென இடி மின்னலுடன் கூடிய பெய்த கனமழை ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. இதனால் சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதேபோல், கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூர், வானரமுட்டி, மணியாச்சி மற்றும் எட்டயபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. மழையின் காரணமாக குளிர்ந்த சூழல் உருவானது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு