தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கிவைத்தார்.
இப்போட்டியை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கிவைத்தார். இப்போட்டிகள் 17 வயதுக்குள்பட்டவர்கள் பிரிவு, 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவு ஆகிய இரண்டு பிரிவுகளின்கீழ் நடைபெற்றது.
17 வயதுக்குள்பட்ட பிரிவினருக்கு 12 கிலோமீட்டர் தூரமும் 17 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 16 கிலோமீட்டர் தூரமும் இலக்கு நிர்ணயம்செய்யப்பட்டது. மொத்தம் 380 பேர் கலந்துகொண்ட இப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு, சான்றிதழைச் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு வழங்கினார்.
இதையும் படிங்க : 'ரஜினி அனைத்தும் அறிந்தவர்; அவர் ஒரு லெஜெண்ட்'