இதையெடுத்து நகரில் சோதனை மேற்கொண்ட தாசில்தார், வேலாயுதபுரத்திலுள்ள ஆட்டிறைச்சி கடையில் விற்பனை நடைபெறுவதை கண்டறிந்து, அந்தக் கடைக்கு சீல் வைத்தது மட்டுமின்றி, அங்கு இருந்த உரிமையாளர், பணியில் இருந்த நான்கு ஊழியர்கள் என ஐந்து பேரையும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.
இதைத்தொடர்ந்து பார்க் சாலையில் நடத்திய சோதனையில், அங்குள்ள மூன்று கடைகளில் உள்பக்கமாக கடையை பூட்டி கொண்டு ஆடு, கோழி மற்றும் மீன் உள்ளிட்ட இறைச்சி விற்பனை நடப்பதை கண்டுபிடித்துள்ளார்.
இதையெடுத்து மூன்று கடைகளுக்கும் சீல் வைத்து, கடையின் உரிமையாளர்கள் அந்த மூன்று பேரையும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
மேலும் காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், கடையினை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு, செல்போன் மூலமாக வாடிக்கையாளர்களிடம் இறைச்சி ஆர்டர் எடுத்து, அவர்களுக்கு தேவைக்கு ஏற்ப இறைச்சியை வெட்டி கொடுத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
தமிழ்நாடு முழுவதும் கரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த நான்கு வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவது நினைவுக் கூரத்தக்கது.