ETV Bharat / city

மாலத்தீவில் பிடிபட்ட தூத்துக்குடி மீனவர்கள்: இன்று சொந்த ஊர் வந்தடைந்தனர்

தூத்துக்குடி: மாலத்தீவில் பிடிபட்ட தூத்துக்குடி மீனவர்கள் 8 பேரும் இன்று சொந்த ஊர் வந்தடைந்தனர்.

மாலத்தீவில் பிடிபட்ட தூத்துக்குடி மீனவர்கள்

author img

By

Published : Mar 13, 2021, 6:06 PM IST

தூத்துக்குடி அடுத்த தருவைகுளத்தை சேர்ந்த அந்தோணி மிக்கேல் கெமில்டனுக்கு சொந்தமான விசைப்படகில், கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அந்தோணி மிக்கேல் பாரத், ஜான் சாமுவேல், அந்தோணி அருள்ராஜ், உள்ளிட்ட 8 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனா்.

எதிா்பாரதவிதமாக, மாலத்தீவின் எல்லைப் பகுதியான குல்குதுபுசி தீவு அருகே சென்றுவிட்டனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த, மாலத்தீவு கடலோர காவல் படையினா் படகையும், அதில் இருந்த 8 மீனவா்களையும் பிடித்துச் சென்றனா்.

இந்நிலையில், 8 மீனவா்கள் மற்றும் அவா்களது விசைப்படகுகளையும் விடுவிப்பதாக மாலத்தீவு அரசு கடந்த 9ஆம் தேதி அறிவித்தது. இதையடுத்து, விடுவிக்கப்பட்ட மீனவா்கள் 8 பேரும், இன்று (மார்ச் 13) தூத்துக்குடி வந்தடைந்தனர்.

இதையும் படிங்க:ரூ.2 லட்சம் மதிப்பிலான மீன் குஞ்சுகள் உயிரிழப்பு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.