தூத்துக்குடி: கோவில்பட்டி உட்கோட்டத்திற்கு கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தாறு, எட்டயபுரம் வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் நேற்று காலை 10 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
காத்திருந்த விவசாயிகள்: இதனையடுத்து காலை 9:30 மணி முதல் விவசாயிகள், கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் திரண்டனர். காலை 10:30 மணிக்கு மேல் கோட்டாச்சியர் நேர்முக உதவியாளர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், வேளாண் உதவி இயக்குநர் ஆகியோர் கூட்டத்தை தொடங்குவதாகக் கூறினர். அப்போது அங்கிருந்த விவசாயிகள், கோட்டாட்சியர் தலைமையில் தான் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் 11.30 மணியை நெருங்கிய நிலையிலும் கோட்டாட்சியர் இதுவரை கூட்டத்துக்கு வரவில்லை என கூறி அதிகாரிகள் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், கூட்டம் நடைபெறும் இடத்தில் 20-க்கும் குறைவான இருக்கைகளே உள்ளன. நாங்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நின்று கொண்டு இருக்கிறோம் என குற்றம் சாட்டினர்.
திணறிய அரசு அதிகாரிகள்: 'இதோ, கோட்டாட்சியர் விரைவில் வந்து விடுவார்; உங்களது குறைகளை தெரிவிக்கவும்.. மனுக்களை கொடுக்கவும்..' என அதிகாரிகள் கூறிய நிலையில், கோட்டாட்சியர் நேரில் வந்து பதில் கூறும் வரை மனுக்களையும் வழங்க மாட்டோம் குறைகளை தெரிவிக்க மாட்டோம் என விவசாயிகள் தெரிவித்தனர். இதனால், கோட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் குழப்பம் ஏற்பட்டது.
தகவல் அறிந்து அங்கு கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த், உதவி ஆய்வாளர் சிலுவை அந்தோணி உட்பட்ட போலீஸார் அங்கு வந்தனர். போலீஸாரை கண்டதும் ஆத்திரமடைந்த விவசாயிகள், 'எதற்காக காவல்துறையை வரவழைத்தீர்கள்..' என கூறி மீண்டும் கோஷங்கள் எழுப்பியபடி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வந்தது லேட்டு : சுமார் 12.30 மணிக்கு மேல் கோட்டாட்சியர் மகாலட்சுமி குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும் கூட்ட அரங்குக்கு வந்தார். த அவர் விவசாயிகள் முன்னிலையில் போதை தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்போம் என கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், நாங்கள் மதுபானம் குடிப்பவர்கள் அல்ல. டாஸ்மாக் மதுபானங்களை விற்பதை நீங்கள் தான். நாங்கள் எதற்கு போதை தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க வேண்டும் என கேள்வி எழுப்பினர். இதனால், மீண்டும் கூட்டரங்கில் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கூட்டம் தொடங்கியது. அப்போது 2020-21-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வரவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர். இந்த மாத இறுதிக்குள் அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனால், கோவில்பட்டி கோட்டாட்சியர் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: நீலகிரி அருகே படுகர் இனமக்களை ஆதிவாசிப்பட்டியலில் சேர்க்கக்கோரி ஆர்ப்பாட்டம்!