ETV Bharat / city

கைம்பெண்ணிடம் கைவரிசை காட்டிய போலி சாமியார் கைது - போலி சாமியார் கைது

விளாத்திகுளத்தில் கைம்பெண்ணிடம் தனது வித்தைகளைக் காட்டி மோசடி செய்த போலி சாமியார் கைதுசெய்யப்பட்டார்.

கைப்பெண்ணிடம் கைவரிசை காட்டிய போலி சாமியார்

author img

By

Published : Sep 7, 2021, 11:34 AM IST

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர் கணேசன் மகன் சக்தி (37). இவர் விளாத்திகுளத்திலிருந்து நாகலாபுரம் செல்லும் சாலையில் ‘சக்தி வாராகி' என்ற பெயரில் ஜோதிட நிலையம் வைத்து பல்வேறு பூஜைகள் நடத்தி, சாமியார் போல காண்பித்துக் கொண்டு ஜோதிடம், குறிபார்க்கும் தொழில் செய்துவந்துள்ளார்.

பரிகார பூஜைகளுக்காக வைக்கப்பட்ட பானைகள்
பரிகார பூஜைகளுக்காக வைக்கப்பட்ட பானைகள்

இவரிடம் தனது குடும்பப் பிரச்சினைகளுக்குப் பரிகாரம் செய்ய எண்ணி விளாத்திகுளத்தைச் சேர்ந்த கணவரை இழந்த 52 வயது கைம்பெண் ஜோதிட நிலையத்துக்குச் சென்றுள்ளார். சாமியார் சக்தி, உங்களது வீட்டை இடித்து மாற்றியமைத்தால் குடும்பப் பிரச்சினை தீரும் எனக் கூறியுள்ளார்.

போலி சாமியார்
போலி சாமியார்

அதற்கு கைம்பெண் தன்னிடம் பணம் இல்லை என்று கூறவே, சாமியார் சக்தி, அந்தப் பெண்ணிடமிருந்து 2.5 பவுன் தங்கச் செயினை பெற்றுக் கொண்டு 30 ஆயிரம் ரூபாயைக் கொடுத்துள்ளார். அதன்படி அந்தக் கைம்பெண்ணும் வீட்டை இடித்துக் கட்டியுள்ளார்.

அதன்பின்னரும் அவரது குடும்பப் பிரச்சினைகள் தீரவில்லை என்று அந்தப் பெண் மீண்டும் சாமியாரிடம் சென்று கேட்டிருக்கிறார். "உங்கள் பிரச்சினைகள் தீர, தங்க செயின், மோதிரம் ஆகியவற்றை உருக்கி தங்கமாகவும், பணம் ரூ.3500-ம் கொண்டுவந்தால், அதில் நான் தாயத்து செய்து, அதை பூஜையில் வைத்துத் தருகிறேன்" என சக்தி கூறியுள்ளார்.

மோசடிக்காக பரிகார பூஜை
மோசடிக்காக பரிகார பூஜை

இதனை நம்பி அந்தப் பெண்ணும் ஏழு கிராம் தங்கத்தை உருக்கி அவரிடம் தங்கம், பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் அவர் இதுவரை தாயத்தும் கொடுக்கவில்லை, அந்த ஏழு கிராம் தங்கம், பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. அதைக் கேட்ட அந்தப் பெண்ணுக்கு கொலை மிரட்டல்விடுத்துள்ளார்.

போலி சாமியாரிடம் ஏமாற்றமடைந்த கைம்பெண்
போலி சாமியாரிடம் ஏமாற்றமடைந்த கைம்பெண்

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் விளாத்திகுளம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கலா தலைமையில் உதவி ஆய்வாளர் தேவராஜ், காவலர்கள் விசாரணை நடத்தி, சக்தியை கைதுசெய்தனர். மேலும் இது போன்று வேறு யாரையும் மோசடி செய்துள்ளாரா என விசாரணை நடத்திவருகின்றனர்.

போலி சாமியார்
போலி சாமியார்

இதையும் படிங்க: போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி: 6 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.