ETV Bharat / city

'ஃபேஸ்புக்கில் காதல்... தூத்துக்குடியில் திருமணம்' - கடல் தாண்டி கரம் பிடித்த காதல் ஜோடி! - கடல் தாண்டி கரம் பிடித்த காதல் ஜோடி

தூத்துக்குடி: ஃபேஸ்புக்கில் காதல் துளிர்த்து, தூத்துக்குடி பொறியாளரை மணந்த மலேசியப் பெண்ணுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

facebook love marriage in tuticorin
author img

By

Published : Nov 10, 2019, 5:54 PM IST

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையை அடுத்த பராக்கிரமபாண்டிய புரத்தைச் சேர்ந்தவர் சுப்பையா - அருள்மதி தம்பதியினர். சுப்பையா ஓட்டப்பிடாரம் தீயணைப்பு நிலையத்தில் உயர் அலுவலராகப் பணியாற்றி வருகிறார். சுப்பையா- அருள்மதி தம்பதியினரின் மகன் மாதவன் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

மாதவனுக்கும், மலேசியாவைச் சேர்ந்த திலகவதி எனும் பட்டதாரி பெண்ணிற்கும் சமூக வலைதளமான ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. திலகவதி மலேசியாவில் வங்கி ஊழியராகப் பணியாற்றி வருகிறார். நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறியது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.

தனிமையில் சந்திக்க ஃபேஸ்புக் தோழியின் அழைப்பு - நம்பிசென்ற இளைஞரின் பணம், செல்ஃபோன் பறிப்பு!

காதலின் அடுத்த கட்டமாக இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இத்தருணத்தில் மாதவனும், திலகவதியும் தங்களது காதலை வீட்டில் எடுத்துக் கூறி, இருவீட்டு பெற்றோரிடமும் சம்மதம் வாங்கினர். இதைத்தொடர்ந்து மாதவன் - திலகவதி திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு இன்று திருமணம் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி தூத்துக்குடி தனியார் மஹாலில் வைத்து மாதவன் - திலகவதிக்கு இன்று காலை இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தில் மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

'ஃபேஸ்புக்கில் காதல்... தூத்துகுடியில் திருமணம்' - கடல் தாண்டி கரம் பிடித்த காதல் ஜோடி

காதல் திருமணம் குறித்து மணமகள் திலகவதி கூறுகையில், 'தமிழ் கலாசாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால், திருமணத்திற்குப் பிறகும் தமிழ்நாட்டிலேயே இருக்க விரும்புகிறேன்' என்றார்.

ஃபேஸ்புக்கில் காதல் துளிர்த்து, தூத்துக்குடி பொறியாளரை மணந்த மலேசியப் பெண்ணுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Intro:முகநூலில் மலர்ந்த காதல்:
தூத்துக்குடி இன்ஜினியரை கரம்பிடித்தார்
மலேசிய வங்கி பெண் ஊழியர் - ருசிகர தகவல்கள்
Body:

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையை அடுத்த பராக்கிரமபாண்டிய புரத்தை சேர்ந்தவர் சுப்பையா -அருள்மதி தம்பதியினர். சுப்பையா ஒட்டப்பிடாரம் தீயணைப்பு நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். சுப்பையா- அருள்மதி தம்பதியினரின் மகன் மாதவன் சத்யராஜ் என்ற மாதவன். என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். என்ஜினீயரான மாதவனுக்கும், மலேசியாவைச் சேர்ந்த திலகவதி எனும் பட்டதாரி பெண்ணிற்கும் சமூக வலைதளமான பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. திலகவதி மலேசியாவில் வங்கி ஊழியராக பணியாற்றி வருகிறார்.

நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறியது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். தொடர்ந்து காதலின் அடுத்த கட்டமாக இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இந்நிலையில் மாதவனும், திலகவதியும் தங்களது காதலை வீட்டில் எடுத்துக் கூறி இருவீட்டு பெற்றோரிடமும் சம்மதம் வாங்கினார். இதைத்தொடர்ந்து மாதவன் -திலகவதி திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு இன்று திருமணம் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி
புதுக்கோட்டை லட்சுமி மஹாலில் வைத்து மாதவன் - திலகவதிக்கு இன்று காலை இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தில் மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

காதல் திருமணம் குறித்து மணமகள் திலகவதி கூறுகையில்,
தமிழ் கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் திருமணத்திற்குப் பிறகும் தமிழ்நாட்டிலேயே இருக்க விரும்புகிறேன் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.