ETV Bharat / city

திருமணத்தை மீறிய உறவால் இருவர் கொலை: கணவர் கைது - double murder news in tamil nadu

கோவில்பட்டி: திருமணத்தை மீறிய உறவில் இருந்த மனைவியையும், அவருடைய ஆண் நண்பரையும் பெண்ணின் கணவர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவில்பட்டி: புங்கவர்நந்தம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மனைவி மாரியம்மாள். மாரியம்மாளுக்கும் அதே பகுதியை சேர்ந்த ராமமுர்த்திக்கும் திருமணத்தை மீறிய உறவில் இருந்து உள்ளனர். இதை அறிந்த மாரியம்மாளின் கணவர் சண்முகம் இருவரையும் வெட்டி படுக்கொலை செய்தார்.

author img

By

Published : Feb 16, 2020, 2:30 PM IST

கோவில்பட்டி அருகே உள்ள புங்கவர்நந்தம் காலனியைச் சேர்ந்தவர் சண்முகம். மேளம் வாசிக்கும் தொழில் செய்துவரும் இவருக்கு, திருமணமாகி மாரியம்மாள் என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். சண்முகத்தின் எதிர் வீட்டில் வசிப்பவர் ராமமுர்த்தி. திருமணமாக ராமமுர்த்தி அதே ஊரில் கூலி வேலை செய்துவருகிறார்.

திருமணத்தை மீறிய உறவு இருவர் கொலை: கணவர் கைது

இந்நிலையில் ராமமுர்த்திக்கும் சண்முகத்தின் மனைவி மாரியம்மாளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். இதையறிந்த சண்முகம் இருவரையும் கண்டித்துள்ளார்.

இதனால் சண்முகத்திற்க்கும், மாரியம்மாளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை ராமமூர்த்தியும், மாரியம்மாளும் ஒன்றாக இருப்பதை பார்த்த சண்முகம், இருவரையும் வெட்டிப்படுகொலை செய்தார். இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் இருவரது உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் கொலையை செய்த சண்முகத்தை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

இதையும் படிக்க:கட்டடத் தொழிலாளி குத்திக் கொலை... திருமணம் மீறிய உறவுதான் காரணமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.