தூத்துக்குடி: கோவில்பட்டி வட்டத்தில் அமைந்துள்ள தனியார் தீப்பெட்டி தொழிற்சாலைக்கு தூத்துக்குடி எம்.பி. கனிமொழி நேரில் சென்றார்.
அங்கு பணியாற்றும் பெண்களிடம் தீப்பெட்டி தொழில் சார்பாக குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் கலந்துகொண்ட தீப்பெட்டி தொழிலை மேம்படுத்துவது தொடர்பான கருத்துக்கேட்பு கலந்தாய்வு கூட்டத்தில் கனிமொழி கலந்துகொண்டார்.
பின் தீப்பெட்டி தொழிலில் உள்ள சிரமங்களை கேட்டறிந்து அதற்குரிய துறைக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணன், வட்டாட்சியர் அமுதா, தேசிய சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: திரையரங்கு திறப்பு எப்போது? - அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதில்