ETV Bharat / city

தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வுசெய்த ஸ்டாலின் - முதலமைச்சர் ஸ்டாலின்

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வுசெய்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் ஆய்வு

author img

By

Published : Dec 3, 2021, 7:19 AM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தேங்கிய மழை வெள்ளத்தில் கடலில் சென்று கலக்கும் வழிப்பாதைகள் ஆக்கிரமிப்புக்குள்ளானதால் சாலைகள், குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்திருந்தது.

குறிப்பாக மாநகரப் பகுதிகளில் ஆதிபராசக்தி நகர், முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர் தொடங்கி கதிர்வேல் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இந்த மழை வெள்ள நீரால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதித்துள்ளது. இரண்டு வாரங்களாக இந்த மழை வெள்ளம் குடியிருப்பில் சூழ்ந்துகொண்டு வெளியேற முடியாமல் நோய்த்தொற்று பரப்பும் சூழலை உருவாக்கியிருக்கிறது.

இந்த நிலையில் ஸ்டாலின், தூத்துக்குடியில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வுசெய்ய நேற்று (டிசம்பர் 2) விமானம் மூலமாக தூத்துக்குடி வந்தடைந்தார். மதியம் 3 மணியளவில் தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பிரையன்ட் நகர் பகுதியில் ஆய்வுசெய்த ஸ்டாலின், சாலையில் தேங்கியுள்ள நீரில் இறங்கி அங்கு காத்திருந்த மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

கோரிக்கை மனுக்களைக் கொடுத்த மக்களிடம் அதைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு வெள்ளம் தேங்கும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும் என உறுதியளித்தார். ஸ்டாலின் ஆய்வின்போது தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, சமூக நலத் துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஆட்சியர், அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், விவசாயிகளைச் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.

பின்னர் தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட அம்பேத்கர் நகர், ரஹ்மத் நகர் பகுதியில் மழைநீர் பாதிப்பு குறித்து ஸ்டாலின் பார்வையிட்டார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் மூன்றாயிரம் பயனாளிகளுக்கு 48 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அரிசி, பருப்பு, பாய் உள்ளிட்ட ஏழு வகையான அத்தியாவசிய பொருள்களை ஸ்டாலின் வழங்கினார்.

இதையும் படிங்க: 'ஈபிஎஸ், ஓபிஎஸ் அதிமுகவின் இரு கண்கள்' - முன்னாள் அமைச்சர் பொன்னையன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.