தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பங்களா பகுதியில் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்ட முகாமை இன்று(ஜூலை 25) அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார். கட்டாலங்குளத்தில் புதிய நீர்த்தேக்க தொட்டி, ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார். எட்டுநாயக்கன்பட்டி கிராமத்தைச் சார்ந்த 34 பனை தொழிலாளர்களுக்கு அரசு மானியமாக ரூ.35 ஆயிரம் வழங்கினார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கீதா ஜீவன், "திமுக பெண்களுக்குப் பாதுகாப்பான அரசாகத் திகழ்வதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்டவையில் காவல் துறையினர் துரிதமாகச் செயல்பட முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இதேபோல தமிழ்நாட்டின் அனைத்து துறைகளையும் முதலமைச்சர் சீர்படுத்தி செயல்படுத்த வைக்கிறார்" என்றார்.
இதையும் படிங்க: திட்டங்களை நிறைவேற்ற ரூ.3000 கோடி தேவை - அமைச்சர் கீதா ஜீவன்