தூத்துக்குடி:குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதன் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கத்துடன் உலக சுகாதார அமைப்பால் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7-ம் தேதி வரை ‘உலக தாய்ப்பால் வாரம்’ கொண்டாடப்படுகிறது. இந்த தாய்ப்பால் வார விழாவையொட்டி, தூத்துக்குடி மில்லர்புரம் வ.உ.சி. கல்லூரி அருகே உள்ள கோளரங்கம் முன்பு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் மூலம் சார்பாக கோலப்போட்டி நடைபெற்றது.
தாய்ப்பாலின் மகத்துவம் அதன் முக்கியத்துவம் மற்றும் தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும், சேய்க்கும் ஏற்படும் நன்மைகள் குறித்து கோலப்போட்டி, வாசகம் எழுதும் போட்டி நடைபெற்றது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட இயக்குநர் (ம) குழும இயக்குநர் அமுதவல்லி, மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ், மற்றும் மாநகராட்சி ஆணையர் சாறு ஸ்ரீ ஆகியோர் முன்னிலையில், சிறப்பு விருந்தினராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு கோலப்போட்டியினை பார்வையிட்டார்.
இப்போட்டியில் சாத்தான்குளம், ஓட்டப்பிடாரம், உடன்குடி அரசு மருத்துவக் கல்லூரி மாணவிகள், ஆழ்வார் திருநகரி, கோவில்பட்டி, திருச்செந்தூர், அரசு செவிலியர் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். திருவைகுண்டம், தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு, மேற்கு, வடக்கு,தெற்கு, கயத்தார், புதூர், விளாத்திகுளம், கோரம்பள்ளம், கருங்குளம், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், மற்றும் ஆதித்தனார் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:கரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் - பள்ளிக்கல்வித்துறை