ETV Bharat / city

தூத்துக்குடியில் தமிழிசை வேட்புமனு தாக்கல் - அதிமுக

தூத்துக்குடி: தூத்துக்குடி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்
author img

By

Published : Mar 25, 2019, 5:08 PM IST

தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுடன் காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19ஆம் தேதி தொடங்கியது.

வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடியும் நிலையில் இன்று வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடந்தது.

அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நண்பகல் 12 மணி அளவில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கானஅதிமுக - பாஜக கூட்டணிக் கட்சியின் வேட்பாளரான தமிழிசைமாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் வேட்புமனுவினை தாக்கல் செய்தார்.

பாஜக வேட்பாளர் தமிழிசைக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது, ’அதிமுக பாஜக கூட்டணிக் கட்சியின் வேட்பாளராக நான் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறேன். இந்தத் தொகுதியில் நிறைய முன்னேற்றம் காணப்பட வேண்டும். ஒரு நேர்மறையான அரசியலைத் தூத்துக்குடியில் எடுத்துச் செல்வதற்காக, நான் இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன். மக்கள் எனக்கு அமோக ஆதரவு தருவார்கள். கூட்டணிக் கட்சியினர் எனக்கு நல்ல ஒத்துழைப்பை வழங்கிவருகின்றனர்’ எனக் கூறினார்.

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18-ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுடன் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான   வேட்புமனுத்தாக்கல் கடந்த 19 --ம்தேதி தொடங்கியது. வேட்புத்தாக்கல் நாளையுடன் முடியும் நிலையில் இன்று வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பை எட்டியுள்ளது.

தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. நண்பகல் 12 மணி அளவில் அதிமுக - பாஜக கூட்டணி கட்சியின் வேட்பாளரான தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக நிற்க விருப்பம் தெரிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி இடம் பெற்று வேட்புமனுவினை தாக்கல் செய்தார்.

பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அதிமுக பாஜக கூட்டணி கட்சியின் வேட்பாளராக நான் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறேன். இந்த தொகுதியில் நிறைய முன்னேற்றம் காணப்பட வேண்டும். ஒரு நேர்மறையான அரசியலை தூத்துக்குடியில் எடுத்துச் செல்வதற்காக நான் இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன். மக்கள் எனக்கு அமோக ஆதரவு தருவார்கள். கூட்டணி கூட்டணிக் கட்சியினர் எனக்கு நல்ல ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர் என கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.