ETV Bharat / city

தூத்துக்குடியில் வாழைத்தார் விலை உயர்வு! - farmers issue in tamil nadu

பருவ மழை மற்றும் கரோனா ஊரடங்கு காரணமாக அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்தில் வாழைத்தார், வாழை இலை விலை உயர்ந்துள்ளது.

வாழைத்தார் விலை உயர்வு
தூத்துக்குடி காமராஜர் மார்கெட்
author img

By

Published : Jan 13, 2022, 10:08 AM IST

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நெல்லுக்கு அடுத்தபடியாக வாழை விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. வாழைக்காய், வாழை இலை உள்ளிட்டவை தூத்துக்குடி காமராஜர் மார்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்நிலையில், மாவட்டத்தில் பெய்த அதிக பருவமழை காரணத்தால் வாழை விவசாய நிலங்களில் தண்ணீர் சூழ்ந்ததில் வாழை சரியான பருவத்திற்கு வரவில்லை, மகசூலும் குறைவாகவே உள்ளது, வரத்தும் குறைந்துள்ளது. இதனால் விலை அதிகரித்துள்ளது.

300 ரூபாய்க்கு விற்ற வாழை தார், இரட்டிப்பு விலையாக இம்முறை 500 மற்றும் 600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ரஸ்தாளி ஒரு தார் ரூபாய் 800க்கும், கற்பூரவல்லி ரூபாய் 900க்கும், ஒட்டுக்காய் ரூபாய் 600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தூத்துக்குடி

பூவன் ரூபாய் 600க்கும், நாட்டு வாழை 700 முதல் 800 ரூபாய்க்கும், செவ்வாழை ரூபாய் 1000க்கும் விற்கப்படுகிறது. குறைந்த உயரம் கொண்ட 3-1/2 அடி உயர வாழை இலை விலை 1000க்கும், 7-1/2 அடி உயரம் கொண்ட வாழை இலை விலை ரூபாய் 2000லிருந்து 3000 வரை விற்கப்படுகிறது.

மேலும், கரோனா ஊரடங்கு காரணமாக அரசாங்கம் விதித்துள்ள பல்வேறு கட்டுப்பாடுகளாலும் வாழை இலை, வாழைத்தார் கடுமையாக விலை உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க: போகி பண்டிகை - உற்சாகமாக கொண்டாடிய மக்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.