ETV Bharat / city

முழு ஊரடங்கை கடைப்பிடிக்காத நபர்களுக்கு அபராதம்! - கரோனா ஊரடங்கு

தூத்துக்குடி: முழு ஊரடங்கை கடைப்பிடிக்காத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Complete lockdown in Thoothukudi
Complete lockdown in Thoothukudi
author img

By

Published : Aug 9, 2020, 5:52 PM IST

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே ஆகஸ்ட் மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவித தளர்வும் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஆகஸ்ட் 9) தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

தூத்துக்குடி விவிடி சிக்னலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது அவசியமின்றி இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் வந்தவர்களை காவலர்கள் எச்சரித்து அனுப்பினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கி அறிவுரை கூறி அனுப்பினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தூத்துக்குடி மாவட்டத்தில் கடைப்பிடிக்கப்படும் முழு ஊரடங்கில் இரண்டாயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 200 இடங்களில் வாகன தணிக்கை செய்யப்படுகிறது.

தூத்துக்குடி மாநகர் பகுதியில் மட்டும் 26 இடங்களில் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கில் அவசியமின்றி வாகனங்களில் வருவோர் மீது வழக்குப்பதிவு, அபராதம் விதித்தல் போன்ற சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் நிதியளித்த ஜோதிகா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.