கடலூர் மாவட்டம் பண்ருட்டி பணிக்கன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விஜி (எ) நந்தகுமார் (40), வைத்தியநாதன் (48), பாலு (36), ராஜ் (36), செளத்ரி (28), ரமேஷ் (40), செந்தில்குமார் (35), ஓட்டுநர் பிராங்ளின் (32) ஆகியோர்.
இவர்கள் திருச்செந்தூர் கோயிலுக்கு இன்னோவா காரில் சென்று கொண்டிருந்த போது எட்டயபுரம் அருகே கீழ ஈரால் பகுதியில் தூத்துக்குடி துறைமுகம் நோக்கி வந்த லாரி இவர்களின் கார் மீது மோதியது. இந்த விபத்தில் பிராங்ளின், நந்தகுமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதில் படுகாயம் அடைந்த ஆறு பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இதுகுறித்து எட்டயபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்க: வெங்காயத்தால் பெருங்'காயம்' அடையும் விவசாயிகள்!