ETV Bharat / city

தூத்துக்குடியில் பேக்கரியை அடித்து நொறுக்கிய கும்பல் - A drunken gang smashed up a bakery in Tuticorin

தூத்துக்குடியில் மதுபாட்டிகள் மறைத்து வைக்க பை கேட்டு பேக்கரி ஊழியர்களை தாக்கி கடையை அடித்து நொறுக்கிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடியில் பேக்கரியை அடித்து நொறுக்கிய குடிகார கும்பல்

author img

By

Published : Jul 20, 2022, 3:21 PM IST

தூத்துக்குடி: கிருஷ்ணராஜபுரம் வட்ட கோவில் அருகில் பேக்கரி கடை நடத்தி வருபவர் பால்பாண்டி, நேற்று(ஜூலை 19) இரவு 10.30 மணியளவில் கடை அடைக்கும் நேரத்தில் மது பாட்டிலுடன் வந்த இரண்டு பேர் போதையில் மதுபாட்டிலை மறைத்து வைக்க துணி பை கேட்டுள்ளனர். பின்னர், கடை ஊழியர்களிடம் பணம் கேட்டதாக கூறப்பட்ட நிலையில், கஞ்சா கும்பலுக்கும் பேக்கரி ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் தொடர்ந்த நிலையில் பிரச்சனை முற்றி கஞ்சா கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பேக்கரி ஊழியர்களையும், உரிமையாளர் பால்பாண்டி மகன் சக்தி ஆகியோரை தாக்கியுள்ளனர். மேலும் பேக்கரியின் முன்பு வைக்கப்பட்டிருக்கும் அலங்கார கண்ணாடிகள் அனைத்தையும் அடித்து நொறுக்கினர்.

தூத்துக்குடியில் பேக்கரியை அடித்து நொறுக்கிய குடிகார கும்பல்

அக்கம்பக்கத்தினர் கூடுவதை கண்டு அங்கிருந்து அந்த நபர்கள் தப்பி சென்றனர். இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:நள்ளிரவில் மதுபானம் கேட்ட தகராறு - இரு இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு... 6 பேர் கைது!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.