தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி-எட்டையபுரம் ரோடு, முக்கரை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (45). இவர் எட்டையபுரம் சமத்துவப்புரத்தில் ஆட்டுப்பண்ணை நடத்தி வருகிறார்.
கடந்த 19ஆம் தேதி இரவில் இவரது ஆட்டுப் பண்ணைக்கு வந்த மதுரை மாவட்டம் அங்காடிமங்களம், திருமணபதி பகுதிகளைச் சேர்ந்த பாஸ்கரன் (37), அக்னிராஜ் (41), சோலை (40), சேட் மகன் திருப்பதி (35), அர்ஜுனன் (50), சுப்பிரமணியன் (70) மற்றும் சிவகங்கை ஆணைகுளம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் (33) ஆகியோர் ராமமூர்த்தி ஆடுகளை திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து ராமமூர்த்தி அளித்த புகாரின் பேரில் எட்டையபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பொன்ராஜ் வழக்குப்பதிவு செய்து அவர்கள் ஏழு பேரையும் கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து ரூ.45 ஆயிரம் மதிப்பிலான 9 ஆடுகளையும், திருடுவதற்கு பயன்படுத்திய லோடு வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!