தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரியில் 750-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர். இதனிடையே மாநிலம் முழுவதும் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையின் மருத்துவர்கள், மாணவர்கள், ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2ஆம் கட்டமாக மருத்துவ மாணவ, மாணவிகள் 200 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 30 மாணவ, மாணவிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட இருப்பதாக மருத்துவக் கல்லூரி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பள்ளி மாணவன் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்!