ETV Bharat / city

'திருட்டு வழக்கில் சிக்கிய பெண் காவலர்'- காவலர்கள் குற்றவாளிகளாக மாற காரணம் என்ன?

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காவல்நிலையம் ஒன்றில் நடந்த திருட்டை விசாரித்த காவலர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காவலர்கள் குற்றவாளிகளாக மாற காரணம் என்ன?

Bike theft at police station Tirunelveli women Police case Graciya மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குழு காவலர்கள் குற்றவாளிகளாக மாற காரணம் என்ன பைக் திருட்டு காவல்நிலையம் மணிவண்ணன் வழக்குரைஞர் பிரம்மா கிரேஸியா திருநெல்வேலி மாவட்ட செய்திகள் Tirunelveli latest news nellai latest news

author img

By

Published : Jan 7, 2021, 2:17 PM IST

Updated : Jan 8, 2021, 7:35 PM IST

திருநெல்வேலி: காவல் பணி, புனிதமான பணி. பொதுமக்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட காவலர்கள் 24 மணி நேரமும் தன்னலம் பாராது பாதுகாப்பு பணியில் ஈடுபடவேண்டும். விடுப்பு இல்லாமல் 24 மணி நேரமும் பணிபுரிபவர்கள் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்கள் காவலர்கள். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் காவல் துறையில் நடைபெறும் தவறுகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன.

பயிரை மேய்ந்த வேலியாக குற்றவாளிகளுடன் கைகோர்த்து, பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவது, அதற்கு உடந்தையாக செயல்படுவதை பார்க்க முடிகிறது. இதற்கிடையில் ஒரு படி மேலே சென்று நெல்லை, தூத்துக்குடியில் காவலர்களே திருடர்களாக மாறி காவலர்களிடம் சிக்கிய சம்பவங்களும் அறங்கேறியுள்ளன.

பெண் காவலர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்த கற்குவேல் என்ற காவலர் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளையடித்த வழக்கில் சமீபத்தில் நெல்லை மாவட்டம் பெருமாள்புரம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், திருட்டு வழக்கில் பெண் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர், நெல்லை மாவட்டம் கூடங்குளம் காவல் நிலையத்தில் பணி புரிந்துவந்த கிரேஸியா (29). இவர், தனது கணவருடன் சேர்ந்து இரவு நேரங்களில் காவல் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பணிபுரிந்தபோது அன்புமணி என்பவரை காதல் திருமணம் செய்துக்கொண்ட கிரேஸியா, சமீபத்தில்தான் கூடங்குளம் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வசதி- வாழ்க்கை ஆசை

வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட இத்தம்பதியினர், குறுக்கு வழியில் சம்பாதித்தால் தான் தங்களது எண்ணம் நிறைவேறும் என்று எண்ணி இந்தத் திருட்டுகளை நடத்தியுள்ளனர். அதாவது இரவு பணியில் இருக்கும்போது பெண் காவலர் கிரேஸியா தனது கணவரை ரகசியமாக வரவழைத்து யாருக்கும் தெரியாமல் காவல்நிலைய வளாகத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களை எடுத்து கொடுத்துள்ளார்.

அந்த வாகனங்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்து பணம் சம்பாதித்து வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் வள்ளியூர் பகுதியை சேர்ந்த மதன்ராஜ் என்பவர் வழக்கு ஒன்றுக்காக தனது இருசக்கர வாகனம் கூடங்குளம் காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் தற்போது அந்த வாகனத்தை காணவில்லை என்று காவலர்கள் தெரிவிப்பதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

எஸ் பி மணிவண்ணன் பேட்டி

இந்தப் புகார் மூலமே பெண் காவலர் கிரேஸியாவின் தில்லுமுல்லு வெட்ட வெளிச்சமானது. அதாவது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் காவல் நிலைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பெண் காவலர் திருட்டுத்தனமாக இருசக்கர வாகனங்களை கணவருக்கு எடுத்துக் கொடுத்தது தெரியவந்தது.

'திருட்டு வழக்கில் சிக்கிய பெண் காவலர்'- காவலர்கள் குற்றவாளிகளாக மாற காரணம் என்ன?

இதையடுத்து பெண் காவலர் மற்றும் அவரது கணவர் மீது வழக்குப்பதிவு செய்து உடனடியாக இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்விவகாரம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “நான் பதவி ஏற்ற பிறகு மணல் திருட்டில் சம்பந்தப்பட்ட ஆறு காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது இதுவே முதல் முறையாகும். அந்தப் பெண் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபோன்று திருடர்களாக மாறுவதற்கு சமூகத்தில் நிலவும் சூழலும் காரணம் என்று கூறலாம்.

எச்சரிக்கை

குறிப்பாக காவல் துறையில் இருப்பதால் அவர்கள் இதுபோன்று திருடர்களாக மாறுகிறார்கள் என்று கூற முடியாது. அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அவர்களின் குடும்ப பின்னணி, பழக்கவழக்கம் என பல்வேறு காரணங்களை கூறலாம்.

இருப்பினும் காவலர்கள் இதுபோன்று செயலில் ஈடுபடாமல் இருக்க அவர்களுக்கு தொடர்ந்து கவுன்சிலிங் வழங்கப்படுகிறது. இதுபோன்று தவறு செய்தால் 100 சதவீதம் தெரிந்துவிடும் என்பதால் அவர்களின் வாழ்க்கை பாதிக்கும். எனவே அதை உணர்ந்து காவலர்கள் செயல்பட வேண்டும்” என்றார்.

பணிநீக்கம்

இந்த வழக்கு குறித்து வழக்குரைஞரும், சமூக ஆர்வலருமான பிரம்மா கூறுகையில், “காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் குற்றவாளிகளாக மாறும் சம்பவம் சமீபகாலமாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருடுப் போன பொருள்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று காவலர்களால் சான்று அளித்த பிறகு மற்றொரு வழக்கில் அந்தத் திருடனை கைது செய்தபோது ஏற்கனவே திருடிய நகைகளை பறிமுதல் செய்யப்பட்டும், அந்த நகைகளை கணக்கில் காட்டாமல் காவலர்கள் பங்கு வைத்துக் கொண்டனர்.

அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் பணியிட மாற்றம் மட்டுமே செய்யப்பட்டனர். ஆனால் இதுபோன்று குற்றவியல் சம்பவத்தில் ஈடுபடும் காவலர்களை பணிநீக்கம் செய்தால் மட்டுமே அவர்களுக்கு அச்சம் ஏற்படும்.

கோரிக்கை

பணியிட மாற்றம் செய்ததால் மீண்டும் அங்கேயும் அவர்கள் திருட்டில் ஈடுபடுகின்றனர். சட்டப்படி நடவடிக்கை எடுக்க பல்வேறு வழிமுறைகள் உள்ளன. எனவே சட்டங்களை உரிய முறையில் பயன்படுத்தி தவறு செய்யும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது பாதிக்கப்பட்ட நபர் புகார் அளித்ததால் தான் பெண் காவலர் சம்பவம் வெளியே தெரிந்தது.

ஆனால் வெளியே தெரியாமல் இன்னும் பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளுக்காக பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குழு அமைக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: தற்காப்புக்காக கொலை செய்த இளம்பெண் விடுதலை!

Last Updated : Jan 8, 2021, 7:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.