தென்காசி: பாவூர்சத்திரத்தில் அய்யா வழி ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாலபிரஜாபதி அடிகளார் தலைமையில், ஏராளமான அய்யா வழி மக்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பாலபிரஜாபதி அடிகளார், “அய்யா வைகுண்டரை சிறைப்பிடித்து திருவனந்தபுரத்திற்கு 100 கிலோமீட்டர் தொலைவிற்கு கால்நடையாய் கயிறு கட்டி அடித்து துன்புறுத்தி இழுத்துச்சென்றார்.
![தென்காசி மாவட்ட செய்திகள் அய்யா வைகுண்டர் தேசிய நெடுஞ்சாலை பால பிரஜாபதி அடிகளார் அய்யா வழி ஒருங்கிணைப்பு குழு Ayya Vaikundar Kanyakumari-Thiruvananthapuram road Tenkasi district news Tenkasi latest news அய்யா வைகுண்டர் தேசிய நெடுஞ்சாலை கன்னியாகுமரி- திருவனந்தபுரம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tki-02-aiya-vaigundar-request-tn10038_30012021200901_3001f_1612017541_834.jpg)
அத்தனைச் சோதனைகளையும் தாண்டி விடுதலை அடைந்து அதே சாலையில் மக்கள் ஆதரவுடன் சுவாமிதோப்பு திரும்பி வந்தார். அவர் நடந்து வந்த கேப்ரோடு என்னும் திருவனந்தபுரம் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலைக்கு அய்யா வைகுண்டர் தேசிய நெடுஞ்சாலை எனப் பெயர் வைக்க வேண்டும்.
இந்தக் கோரிக்கையை 12 ஆண்டுகளாக வலியுறுத்திவருகிறேன். இதனை வலியுறுத்தி 3 லட்சத்திற்கும் மேல் சாதி, சமய வேறுபாடின்றி கையெழுத்துகள் பெற்று மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
![தென்காசி மாவட்ட செய்திகள் அய்யா வைகுண்டர் தேசிய நெடுஞ்சாலை பால பிரஜாபதி அடிகளார் அய்யா வழி ஒருங்கிணைப்பு குழு Ayya Vaikundar Kanyakumari-Thiruvananthapuram road Tenkasi district news Tenkasi latest news அய்யா வைகுண்டர் தேசிய நெடுஞ்சாலை கன்னியாகுமரி- திருவனந்தபுரம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tki-02-aiya-vaigundar-request-tn10038_30012021200901_3001f_1612017541_189.jpg)
மத்திய அரசு இந்தக் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை ஆதரிக்கும் கட்சியை மட்டுமே வரக்கூடிய சட்டப்பேரவை தேர்தலில் ஆதரிக்க உள்ளேன்” என்றார்.
இதையும் படிங்க: ஆன்மிக சீர்திருத்தவாதி அய்யா வைகுண்டர்!