திருநெல்வேலி: கோபாலசமுத்திரம், பிராஞ்சேரி, வீரவநல்லூர், பத்தமடை ஆகிய இடங்களில் கடந்த சில மாதங்களாக சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று (மே.5) பத்தமடை அருகே ஊழியர்கள் சாலையில் இடையூறாக இருந்த மரத்தை வெட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஷேர் ஆட்டோ மீது மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்தது. இதில் ஆட்டோ சுக்குநூறாக அப்பளம் போல் நொறுங்கியதில் ரஷ்மத் என்ற பெண்ணும் காதர் என்பவரும் உயிரிழந்தனர்.
தொடர்ந்து பத்தமடை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற ஆட்டோவை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்த இருவரின் உடல்களும் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நடப்பாண்டில் 10 பிஎச்டி கல்லூரிகள் தொடங்கப்படும் - அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் உறுதி