ETV Bharat / city

உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதி வழங்கிய எஸ்.பி.! - Thirunelveli S.P.manivannan

திருநெல்வேலி: பணியின்போது உயிரிழந்த ஊர்க்காவல் படை காவலர் குடும்பத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 2 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

To the family of the deceased police Rs. 2 lakh funded by S.P.manivannan

author img

By

Published : Aug 27, 2020, 7:18 AM IST

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் பகுதியில் கரோனோ தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஊர்க்காவல் படை காவலர் சுப்பையா சமீபத்தில் பணி முடித்துவிட்டு வீடு திரும்பும்போது மாரடைப்பால் மரணமடைந்தார்.

இதையடுத்து, அவரது குடும்பத்திற்கு மாவட்ட காவல் துறையினர் உதவிசெய்ய முன்வந்தனர். அதன்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஏற்பாட்டின்படி காவலர்கள் தாங்களாக முன்வந்து நிதியை மாவட்ட காவல் நிர்வாகத்திடம் வழங்கினர்.

இந்நிலையில், உயிரிழந்த சுப்பையாவின் மனைவி லதா சங்கரியை நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் நேரில் அழைத்து காவல் துறை சார்பில் 2 லட்சம் ரூபாய் நிதியுதவியை வழங்கினார்.

அப்போது ஊர்க்காவல் படை துணை வட்டாரத் தளபதி வினோத், வின்சென்ட், ராஜேஷ் ஆகியோர் உடனிருந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.