ETV Bharat / city

பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்ட மாணவர்களின் உடல்: கண்ணீருடன் வழங்கப்பட்ட நிவாரணத் தொகை - tirunelveli school wall collapse issue

முதலமைச்சர் அறிவித்த 10 லட்சம் ரூபாய்க்கான நிவாரணத் தொகையை அமைச்சர் ராஜகண்ணப்பன் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்களிடம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டுப் பலத்த பாதுகாப்புடன் அவரவர் சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்ட மாணவர்களின் உடல்

author img

By

Published : Dec 17, 2021, 9:50 PM IST

திருநெல்வேலி டவுன் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், நான்கு மாணவர்கள் படுகாயங்களுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இந்த விபத்தில், நெல்லை நரசிங்க நல்லூரைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர் அன்பழகன், தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படித்து வந்த மாணவன் விஸ்வ ரஞ்சன், பழவூர் பகுதியைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு படித்து வந்த மாணவன் சுதீஸ் ஆகிய மூன்று பேரும் உயிரிழந்தனர்.

உடலை வாங்க மறுத்த உறவினர்கள்
உடலை வாங்க மறுத்த உறவினர்கள்

உடலை வாங்க மறுத்த உறவினர்கள்

இந்நிலையில், பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நடைபெற்றதாக சக மாணவர்கள் மற்றும் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாகச் சம்பவம் நடைபெற்ற சில மணி நேரத்தில் மாணவர்கள் பள்ளியை அடித்து நொறுக்கி, தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.

இதற்கிடையில், உயிரிழந்த 3 மாணவர்களின் உடல்களும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது.

உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

முன்னதாக முதலமைச்சர் அறிவித்த 10 லட்சம் நிவாரணத் தொகை வழங்குவதற்காகத் தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மற்றும் அரசின் உயர் அலுவலர்கள் மருத்துவமனைக்குச் சென்றனர்.

பெற்றோர்களிடம் நிவாரணத் தொகை

ஆனால், பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்ட கல்வி அலுவலரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

இதனால் அங்குப் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, தற்போது உறவினர்கள் உயிரிழந்த மாணவர்களின் உடலை வாங்க சம்மதம் தெரிவித்தனர்.

கண்ணீருடன் அரசின் நிவாரணத் தொகை பெற்றனர்
கண்ணீருடன் அரசின் நிவாரணத் தொகை பெற்ற பெற்றோர்

இதனையடுத்து, முதலமைச்சர் அறிவித்த 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகைக்கான காசோலையை அமைச்சர் ராஜகண்ணப்பன் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்களிடம் வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டுப் பலத்த பாதுகாப்புடன் சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதேபோல், படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்று வரும் நான்கு மாணவர்களையும் அமைச்சர் ராஜகண்ணப்பன் நேரில் சந்தித்து நலம் விசாரித்து முதலமைச்சர் அறிவித்த 3 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

இதையும் படிங்க: பள்ளி சுவர் இடிந்து விபத்து: தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.