ETV Bharat / city

School accident: அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - மனித உரிமை ஆணைய நீதிபதி அதிரடி - மனித உரிமைகள் ஆணைய ஆணையர் துரை ஜெயச்சந்திரன் நெல்லையில் ஆய்வு

School accident: பள்ளி விபத்தில் பலியான 3 மாணவர்கள் விவகாரத்தில் பள்ளிக்கு உறுதித் தன்மை சான்று வழங்கிய அலுவலர்கள் மீது விசாரணை நடத்தப்படும் என விபத்து நடந்த பள்ளியில் ஆய்வு செய்த பிறகு மனித உரிமைகள் ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

சிற தன்மை சான்று
சிற தன்மை சான்று
author img

By

Published : Dec 24, 2021, 9:20 PM IST

நெல்லை: School accident: நெல்லை டவுனில் உள்ள சாப்டர் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 17ஆம் தேதி கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் அன்பழகன், சுதீஸ், விஸ்வரஞ்சன் ஆகிய 3 மாணவர்கள் பலியாகினர்.

மேலும் 3 மாணவர்கள் படுகாயமும் 2 மாணவர்கள் லேசான காயமும் அடைந்தனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நடைபெற்றதாக சக மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரும் மக்கள்

இச்சம்பவத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியை, தாளாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டாலும் கூட, பள்ளிக்கு கட்டட உறுதித்தன்மை சான்றிதழ் வழங்கி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர் கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்தச் சூழ்நிலையில் சாப்டர் பள்ளி விபத்தில் சம்பந்தப்பட்ட கட்டடத்துக்கு உறுதிச்சான்று வழங்கிய அலுவலர்கள் மீதும் விசாரணை நடத்தப்படும் என்று மனித உரிமை ஆணையத்தின் ஆணையர் தெரிவித்துள்ளார்.

ஆணையர் துரை ஜெயச்சந்திரன் அதிரடி

அதாவது இச்சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன் இன்று (டிச.24) நெல்லை டவுனில் உள்ள சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் சுவர் இடிந்து விழுந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, இந்தச் சுவர் பேஸ்மெண்ட் இல்லாமல் கட்டப்பட்டது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார். மேலும் அந்தப் பள்ளியின் கட்டட தரம் குறித்தும் ஆணையர் துரை ஜெயச்சந்திரன் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து மனித உரிமை ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, 'இந்தப் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் பலியாகியுள்ளனர்.

இதில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட 3 பேர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் இந்த கட்டடங்களுக்கு உறுதித்தன்மை சான்று வழங்கிய அரசு அலுவலர்களையும் நேரடியாக ஆணையத்தின் முன்பு அழைத்து அவர்களிடமும் விசாரணை நடத்தப்படும்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Vadivelu affected Covid 19: வடிவேலுவிற்குக் கரோனா - என்ன நிகழ்ந்தது?

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.