பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டத்திலும் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் மோப்ப நாய்களுடன் சோதனையில் ஈடுபட்டனர். ரயில் பெட்டிகள், அலுவலகங்கள் தண்டவாளங்கள், பயணிகளின் பொருள்கள் உள்ளிட்டவைகளை சோதனைக்குள்ளாக்கப்பட்டன.
இதுகுறித்து ரயில்வே டிஎஸ்பி சுதிர்லால் கூறுகையில், “பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக இன்று இந்தச் சோதனை நடத்தப்பட்டது. ரயில் நிலையங்களில் நாளை உரிய பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.