ETV Bharat / city

ராணுவத்தில் மூன்று மகன்கள்; திருநெல்வேலி பெண்மணிக்கு வீரத்தாய் விருது!

author img

By

Published : Jan 3, 2022, 9:20 AM IST

இராணுவத்தில் மூன்று மகன்கள் பணிபுரிந்துவரும் நிலையில், இந்த எல்லைச் சாமிகளை ஈன்றெடுத்த பெண்மணிக்கு வீரத்தாய் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

வீரத்தாய் விருது பெற்ற திருநெல்வேலி மூதாட்டி

திருநெல்வேலி : அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் ராணுவத்தில் சேர்ந்து அனைவருக்கும் முன்னூதரணமாக உள்ளனர்.

தன் மனைவியின் பிரசவ நேரத்திலும் எல்லையில் கார்கில் போரில் பங்கேற்றவரும், சரியான பராமரிப்பு இல்லாததால் மன வளர்ச்சி குன்றிய குழந்தை பிறந்த பின்னும் நொறுங்கி விடாமல் உறுதியுடன் போராடியவர்தான் இந்த ராணுவ குடும்பத்தின் தலைமகன் அரிராம்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வன்னியர் தெருவைச் சேர்ந்த தம்பதியினர் ராமகிருஷ்ணன்- சுப்புலட்சுமி. ராமகிருஷ்ணன் சர்வோதயா சங்கத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.

முத்தான மூன்று மகன்கள்

ராமகிருஷ்ணன், சுப்புலட்சுமி தம்பதியினருக்கு அரிராம், ரத்தினப்பா, சண்முக வேலாயுதம் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். மேலும் இரண்டு மகள்களும் உள்ளனர். தனது மகன்கள் மூன்று பேரையும் ராமகிருஷ்ணன் தம்பதி இந்திய ராணுவத்தில் சேர்த்து சக பெற்றோருக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து வருகின்றனர்.

அதன்படி மூத்த மகனான அரிராம் ராணுவத்தில் ஹவில்தாராக 20 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர், இரண்டாவது மகன் ரத்தினப்பா தற்போது போபாலிலும் மூன்றாவது மகன் சண்முக வேலாயுதம் டெல்லியில் ராணுவ மருத்துவப் பிரிவில் பணிபுரிந்து வருகின்றனர்.

வீரத்தாய் விருது

இந்த நிலையில் சுப்புலட்சுமியின் நாட்டுப்பற்றை போற்றும் வகையில் மத்திய அரசு அவருக்கு சமீபத்தில் வீரத்தாய் விருதும், வெள்ளிப்பதக்கமும் வழங்கியது.

வீரத்தாய் விருது பெற்ற திருநெல்வேலி பெண்மணி

இதற்கிடையில் வீரத்தாய் விருதுபெற்ற சுப்புலட்சுமியின் குடும்ப பின்னணியில் வலி நிறைந்த ராணுவ கதை ஒன்று நிறைந்திருப்பதை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். அதாவது சுப்புலட்சுமியின் மூத்த மகனான அரிராம் 1999ஆம் ஆண்டு பணியில் இருந்த போது கார்கில் போரில் பங்கேற்றுள்ளார்.

ராணுவத்தில் அவர் ஹவில்தாராக இருந்ததால் அவருக்கு சில முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் கார்கில் போரின்போது விடுமுறை இல்லாமல் தொடர்ச்சியாக பல மாதங்கள் பணிபுரிய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அதேசமயம் அரிராமின் மனைவி ராஜேஸ்வரி திருவனந்தபுரத்தில் வசித்து வந்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ராஜேஸ்வரி தனது கணவர் போருக்கு சென்றதால் தனது உடல் நிலையை சரிவர கவனிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

உறவினர்களும் அருகில் இல்லாததால் உரிய நேரத்தில் பிரசவம் பார்க்க முடியாமல் மிகவும் சிரமத்தை சந்தித்துள்ளார். இதன் விளைவாக அரிராம் ராஜேஸ்வரி தம்பதிக்கு பிறந்த குழந்தை மாற்றுத்திறனாளியாக பிறந்துள்ளது.

போர் முடித்து வந்தவருக்கு பேரதிர்ச்சி

போரில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியோடு 8 மாதம் கழித்து தனது மனைவியையும் குழந்தையையும் நேரில் பார்ப்பதற்கு ஆர்வமுடன் வந்த அரிராம் தனது குழந்தை மாற்றுத்திறனாளியாக பிறந்திருப்பது கேள்விப்பட்டு அதிர்ச்சிக்குள்ளானார்.

தற்போது வரை அரிராம் தம்பதியினர் இந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்றாலும் கூட ராணுவத்தின் மீது உள்ள பற்றும் பாசமும் சிறிதளவும் குறையவில்லை என்கிறார்கள்.

இது குறித்து அரிராம், “எங்கள் குடும்பத்தில் மூன்று பேரும் ராணுவத்தில் பணிபுரிந்த காரணத்தால் அம்மாவுக்கு வீரத்தாய் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மூன்று மகன்களையும் ராணுவத்திற்கு அனுப்பியதால் எனது தாய் மிகவும் சிரமங்களை சந்தித்தார். நான் பணியில் இருந்த போது 1999ஆம் ஆண்டு கார்கில் போரில் பங்கேற்றேன், அப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த எனது மனைவியை சரிவர கவனிக்க முடியவில்லை.

போர் முடிந்து எட்டு மாதம் கழித்து தான் குழந்தையை பார்க்க வந்தேன். உரிய நேரத்தில் பிரசவம் பார்க்க முடியாததால் எனது குழந்தை மாற்றுத்திறனாளியாக பிறந்தது. இருப்பினும் ராணுவம் மீது உள்ள பற்று குறையாது ராணுவம் ஒரு புனிதமான பணி தமிழ்நாட்டில் அதிக இளைஞர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்றார்.

அரிராம் மனைவி ராஜேஸ்வரி, “கார்கில் போர் மறக்க முடியாத சம்பவம். எனது மகன் மாற்றுத்திறனாளியாக பிறந்தாலும் ராணுவத்தின் மீது உள்ள பாசம் குறையாது. அந்தச் சமயத்தில் எல்லோரும் கார்கில் போருக்கு சென்று விட்டதால் மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை. முறையான பிரசவம் பார்க்க முடியாததால் எனது மகன் இதுபோன்று பாதிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் போரில் கிடைத்த வெற்றியை நினைக்கும் போது இது எனக்கு பெரிதாக தெரியவில்லை” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அரிராம் ராணுவத்தில் 20 ஆண்டுகள் பணிபுரிந்து விட்டு கடந்த 2007ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்று சொந்த ஊரில் குடியேறினார். தற்போது இவர்களுக்கு மற்றொரு ஆண் மகன் உள்ளார்.

இதையும் படிங்க:நன்னிலம்; அரசு பள்ளி ஆசிரியர்களை கௌரவித்த முன்னாள் மாணவர்கள்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.