இந்நிலையில் எம்பவர் இந்திய சுற்றுச்சூழல் மற்றும் நுகர்வோர் கல்வி ஆராய்ச்சி நடுவத்தின் செயல் இயக்குநர் சங்கர் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தாமிரபரணி ஆறு பாய்ந்து வரும் நெல்லை மாநகரம் உள்ளிட்ட பல இடங்களில் உள்ளாட்சிகளில் கழிவுநீர் ஆற்றில் கலப்பதால் தண்ணீர் மாசுபட்டு குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை.
கருப்பந்துறை, கைலாசபுரம், புளியந்தோப்பு, வண்ணாரப்பேட்டை, சிந்துபூந்துறை உள்ளிட்ட இடங்களில் கழிவுநீர் ஆற்றில் நேரடியாக கலந்து மாசடைகிறது.
மேலும் தாமிரபரணி நதி நெல்லை மாவட்டம் மட்டுமல்லாது தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் இந்தப் பிரச்னையில் நேரடியாகத் தலையிட்டு மேற்கண்ட இடங்களில் ஆய்வுமேற்கொண்டு உள்ளாட்சிகளிலிருந்து கழிவுநீர் கலப்பதை தடுத்துநிறுத்தி சுத்தமான சுகாதாரமான தண்ணீர் பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.