திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், நாங்குநேரி தொகுதியில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் வாக்கு அதிகளவில் அதிமுகவுக்கு இருப்பதால், அதைத் தடுக்கும் நோக்கத்தில் திமுகவினர் உண்மைக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டுவருவதாக குற்றஞ்சாட்டினார்.
சிறுபான்மையினருக்கு அதிமுக விரோதமாகச் செயல்படுவதாக திமுக அரசியல் நாடகம் நடத்திவருவதாகவும் ஆனால் திமுக கூட்டணியில் உள்ள ஒரு இஸ்லாமிய கட்சிதான் இதுபோன்ற விவகாரங்களில் ஈடுபட்டுவருவதாகவும் விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுக கூட்டணி வலுவாக உள்ளதால் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் தங்கள் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:'சீனி சக்கரை சித்தப்பா, பேப்பரில் எழுதி நக்கப்பா!' - காங்கிரசை பங்கம் செய்த ராஜேந்திர பாலாஜி