ETV Bharat / city

‘ஒண்ணும் கிடையாது... நாறுது, வெளியே போங்க..!’ கோட்டாட்சியரின் வன்ம உரையாடல்!

திருநெல்வேலி: சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி சந்திக்கச் சென்ற மக்களை, ‘துர்நாற்றம் வீசுகிறது, வெளியே செல்லுங்கள்’ என்று கோட்டாட்சியர் (கூடுதல் பொறுப்பு) கூறியதால், காட்டு நாயக்கர் இன மக்கள் அவர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோட்டாட்சியரின் வன்ம உரையாடல்
author img

By

Published : Aug 29, 2019, 5:44 PM IST

திருநெல்வேலி மாவட்டத்தில் தருவை, வீரவநல்லூர் எனப் பரவலாக பல்வேறு இடங்களில், காட்டு நாயக்கர் சமூக மக்கள் வசித்துவருகின்றனர். அவர்கள் தொடர்ந்து தங்களுக்குச் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டி பல ஆண்டுகளாகப் போராடிவருகின்றனர்.

அந்த வகையில் இம்மக்களின் வாழ்வியல் பண்பாடு குறித்து, சென்னை பல்கலைக்கழக மானுடவியல் துறை ஆய்வு மேற்கொண்டு காட்டு நாயக்கர் சமூகம் என சாதிச் சான்றிதழ் வழங்கலாம் என்று கடந்த ஜனவரி மாதம் 9ஆம் தேதியே அரசுக்கு அறிக்கை கொடுத்துவிட்டது. அதன் அடிப்படையில் தங்களுக்குச் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டுமென்று கேட்டு அச்சமூக மக்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.

இந்நேரத்தில், திருநெல்வேலி மாவட்டம் தருவையில் வசித்து வரக்கூடிய காட்டு நாயக்கர் சமூக மக்கள் சாதி சான்றிதழ் கேட்டு திருநெல்வேலி கோட்டாட்சி தலைவரைச் சந்திக்கச் சென்றனர். அப்போது உள்ளே சென்ற மக்களிடம், ’உங்கள் மீது துர்நாற்றம் வீசுவதால் வெளியே செல்லுங்கள்’ என்று கூறியதோடு, தமிழில் பேச மறுத்து இந்தி மொழியில் மட்டுமே கோட்டாட்சியர் (கூடுதல் பொறுப்பு) மனிஷ் நாரணவரே பேசியதாகவும் தெரிகிறது.

கோட்டாட்சியரின் வன்ம உரையாடலை சகித்துக் கொள்ள முடியாமல் போராட்டத்தில் குதித்த மக்கள்

இதனால் விரக்தி அடைந்த மக்கள் தங்களுக்கு உடனடியாக மானுடவியல் துறை கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் காட்டு நாயக்கர் என்று சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும், கோட்டாட்சியர் செயல்பாடுகளைக் கண்டித்தும், அவர் அலுவலகம் முன்பு குடும்பத்தோடு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சாதிச் சான்றிதழ் இல்லாத காரணத்தால், காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் கல்வியைக் கற்க முடியாத நிலை இருப்பதாகவும், ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலைகளில் கல்வி கற்றாலும்கூட வேலை வாய்ப்புகளில் தங்களுக்கு இடம் கிடைக்காமல் பாதிக்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.

கல்வியை கற்றுவிட்டு மீண்டும் தாங்கள் பிச்சை எடுக்கும் நிலையிலேயே உள்ளோம். காலத்திற்கும் எங்களது குலத் தொழிலைத் தொடர வேண்டுமா அல்லது பிச்சை எடுத்துதான் பிழைக்க வேண்டுமா எனவும் கேள்வி எழுப்புகின்றனர் காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள். இதனைத் தொடர்ந்து அரசு அலுவலர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் அவசியம் சாதிச் சான்றிதழ் வழங்குவதாகக் கூறியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Intro:ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி சந்திக்கச் சென்ற மக்களை துர்நாற்றம் வீசுவதால் வெளியே செல்லுங்கள் என்று கூறியதாகவும், தமிழ் மொழியில் பேசாமல் இந்தி மொழியில் மட்டுமே கோட்ட ஆட்சித்தலைவர் பேசுவதாகவும் கூறி காட்டு நாயக்கர் சமூக மக்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கோட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்Body:ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி சந்திக்கச் சென்ற மக்களை துர்நாற்றம் வீசுவதால் வெளியே செல்லுங்கள் என்று கூறியதாகவும், தமிழ் மொழியில் பேசாமல் இந்தி மொழியில் மட்டுமே கோட்ட ஆட்சித்தலைவர் பேசுவதாகவும் கூறி காட்டு நாயக்கர் சமூக மக்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கோட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருநெல்வேலி மாவட்டத்தில் தருவை வீரவநல்லூர் என பரவலாக பல்வேறு இடங்களில் காட்டு நாயக்கர் சமூக மக்கள் வசித்து வருகின்றனர் அவர்கள் தொடர்ந்து தங்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அந்த வகையில் இந்த மக்கள் வாழ்வியல் பண்பாடு குறித்தும் சென்னை பல்கலைகழக மானுடவியல் துறை ஆய்வு மேற்கொண்டு காட்டு நாயக்கர் சமூகம் என ஜாதி சான்றிதழ் வழங்கலாம் என்று கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் தேதியே அரசுக்கு அறிக்கை கொடுத்துவிட்டது இந்த நிலையில் அதன் அடிப்படையில் தங்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டுமென்று கேட்டு காட்டு நாயக்கர் சமூக மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் அந்தவகையில் திருநெல்வேலி மாவட்டம் தருவையில் வசித்து வரக்கூடிய காட்டு நாயக்கர் சமூக மக்கள் சாதி சான்றிதழ் கேட்டு திருநெல்வேலி கோட்டாட்சித் தலைவரை இன்று சந்தித்தனர் அப்போது உள்ளே சென்ற மக்களை உங்கள் மீது துர்நாற்றம் வீசுவதால் வெளியே செல்லுங்கள் என்று கூறியதோடு தமிழில் பேச மறுத்து இந்தி மொழியில் மட்டுமே கோட்டாட்சியர் மணிஷ் நாரணவரே கூறியதாகவும் தெரிகிறது இதனால் விரக்தி அடைந்த மக்கள் தங்களுக்கு உடனடியாக மானுடவியல் துறை கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் காட்டு நாயக்கர் என்று ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கோட்டாட்சியர் செயல்பாடுகளைக் கண்டித்து கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்தோடு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் ஜாதி சான்றிதழ் இல்லாத காரணத்தால் காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் கல்வியை கற்க முடியாத நிலை இருப்பதாகவும் ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலைகளில் கல்வி கற்றாலும் கூட வேலை வாய்ப்புகளில் தங்களுக்கு இடம் கிடைக்காமல் பாதிக்கப்படுவதாகவும் கல்வியை கற்று விட்டு மீண்டும் தாங்கள் பிச்சை எடுக்கும் நிலையே உள்ளதாகவும் ஜாதி சான்றிதழ் கிடைக்காததால் கல்வி தொடர்பான சலுகைகள் ஏதும் கிடைப்பதில்லை கல்வியை தொடர முடியவில்லை இடைநிற்றல் அதிகரித்துள்ளது என வேதனை தெரிவிக்கின்றனர் மேலும் காலத்திற்கும் எங்களது குலத் தொழிலை தொடர வேண்டுமா அல்லது பிச்சை எடுத்து தான் பிழைக்க வேண்டுமா எனவும் கேள்வி எழுப்புகின்றனர். இதனை தொடர்ந்து அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் கண்டிப்பாக ஜாதி சான்றிதழ் வழங்குவதாக கூறியதை அடுத்து அவர்கள் களைந்து சென்றனர்.

நெல்லை மாவட்ட நிர்வாக முடிவால் மாவட்டத்தில் காட்டு நாயக்க சமுதாய மக்கள் சுமார் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஜாதி சான்றிதழ் பெற முடியாததால் கல்வி உரிமை மறுக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இது குறித்து அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமா??

பேட்டி: செல்வம் (பெண்) ( பாதிக்கப்பட்ட சமூக மக்கள் )Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.