ETV Bharat / city

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா சிறை மருத்துவமனையில் அனுமதி - Priest George Ponnaiya was admitted to prison hospital

பிரதமர் மோடியையும் இந்து மதத்தையும் இழிவுபடுத்தி பேசியது தொடர்பாக கைது செய்யப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பாளையங்கோட்டை சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா
பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா
author img

By

Published : Jul 24, 2021, 10:00 PM IST

திருநெல்வேலி: கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் ஜூலை 18ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் ஒன்றில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும், இந்து மதத்தையும் இழிவுபடுத்திப் பேசியதாகக் காவல் துறையினரால் தேடப்பட்டு வந்தார்.

அதைத் தொடர்ந்து இன்று (ஜூலை 24) மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் கைது செய்யப்பட்டார். அவரை குழித்துறை நீதிமன்றத்தில் காவலர்கள் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி அவர் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இந்த நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதன்காரணமாக சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முன்னதாக குழித்துறை மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாதிரியார் பொன்னையா கோவில்பட்டி டிஎஸ்பியிடம் ஒப்படைப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.