ETV Bharat / city

கரைபுரண்டு ஓடும் வெள்ள நீர் : குடிநீருக்காக தவிக்கும் மக்கள்

author img

By

Published : Jan 20, 2021, 1:22 PM IST

திருநெல்வேலி: இடைவிடாது பெய்த மழையால் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய போதும் குடிநீருக்காக வீதி வீதியாக மக்கள் அலையும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

கரைபுரண்டு ஓடும் வெள்ள நீர் : குடிநீருக்காக தவிக்கும் மக்கள்
கரைபுரண்டு ஓடும் வெள்ள நீர் : குடிநீருக்காக தவிக்கும் மக்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் வரலாற்றில் இல்லாத வகையில் கன மழை கொட்டி தீர்த்தது. கடந்த வாரம் வரை மாவட்டம் முழுவதும் தொடர் மழை பெய்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். குறிப்பாக ஜனவரி 1 முதல் 15ஆம் தேதி வரை மட்டும் திருநெல்வேலி மாவட்டத்தில் சராசரியாக 330 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.

இடைவிடாது பெய்த மழையால் மாவட்டத்தின் பிரதான அணையான மணிமுத்தாறு, பாபநாசம் அணைகள் நிரம்பி வழிந்தன. அணையின் பாதுகாப்பு கருதி அதிகபட்சம் 60 ஆயிரம் கனஅடி உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டதால் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

தொடர்ந்து ஐந்து நாட்களாக ஆற்றில் பெருவெள்ளம் ஓடியதால் கரையோரம் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சுமார் 15 நாட்களுக்கு பிறகு கடந்த இரண்டு தினங்களாக திருநெல்வேலியில் மழை இல்லாமல் இருக்கிறது. இதனால் ஆற்றில் வெள்ளம் குறைந்து இயல்பு நிலை திரும்பினாலும் கூட தற்போது குடிநீருக்காக மக்கள் வீதி வீதியாக அலைய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் ஆற்றுப்பகுதியில் உள்ள குடிநீர் உறை கிணறுகள் மற்றும் நீர்த்தேக்கத் தொட்டிகள் வெள்ளத்தில் மூழ்கி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டது. குறிப்பாக திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் மட்டும் 40க்கும் மேற்பட்ட உறை கிணறுகள் ஆற்றுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியதால் கடந்த 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு திருநெல்வேலியில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக மாநகராட்சி அறிவித்தும் தற்போது வரை குடிநீர் விநியோகம் சீராகவில்லை

மாற்று ஏற்பாடாக பிற பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு லாரிகள் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் சில தெருக்களில் மட்டுமே வழங்கப்படுவதால் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் சமையல் மற்றும் குடிப்பதற்காக தண்ணீர் எடுக்க பல கிலோ மீட்டர் தூரம் நடந்து கால்வாயில் அசுத்தமான நீரை எடுத்து செல்கின்றனர்.

இதற்கிடையில் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் ஏற்பட்ட வெள்ள சேதத்தை மதிப்பீடு செய்து புனரமைப்பு செய்திட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் மகேஸ்வரன் தலைமையில் 20 பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் கடந்த 16ஆம் தேதி முதல் மாவட்டம் முழுவதும் ஆற்றுப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு குழுவிற்கும் இரண்டு கூட்டு குடிநீர் திட்டங்கள் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சுமார் 120 பொறியாளர்கள், புவியியல் வல்லுநர்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது வரை 15 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டதாகவும் மீதமுள்ள கூட்டுக் குடிநீர் திட்டங்கள் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. வீதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய போதும் குடிநீருக்காக வீதிவீதியாக மக்கள் அலைய வேண்டிய உள்ளது. எனவே, மக்களின் சிரமத்தை கருதி உடனடியாக குடிநீர் விநியோகத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் தைப்பூச திருவிழா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.