நெல்லை மாவட்டம் வாகைக்குளத்தைச் சேர்ந்த பாவநாசம், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், "எனது மகன் முத்து மனோ (27) களக்காடு போலீசாரால் கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டு திருவைகுண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
பின்னர் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில், ஏப்.22ஆம் தேதி அவர் கொலை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்தக் கொலை குறித்து நீதித்துறை விசாரணை நடத்தவும், துவக்க கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் ரூ.2 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்." என்றும் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், இளங்கோவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இதே வழக்கு தனி நீதிபதி அமர்வில் நிலுவையில் இருப்பதால் இந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முதன்மை அமர்வுக்கு மாற்ற பதிவாளருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 7ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
விசாரணைக்கைதி கொலை வழக்கு
பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணைக்கைதி கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணையை முதன்மை அமர்வுக்கு மாற்ற உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.