ETV Bharat / city

நடைமுறைக்கு சாத்தியமில்லாதவையைதான் அரசியல் கட்சிகள் அறிவிக்கின்றன- நடிகர் கார்த்திக் - Actor karthik campaign

திருநெல்வேலி: மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனை ஆதரித்து நடிகர் கார்த்திக் பரப்புரையில் ஈடுபட்டார்.

நடைமுறைக்கு சாத்தியமில்லாதவையைதான் அரசியல் கட்சிகள் அறிவிக்கின்றன- நடிகர் கார்த்திக்
author img

By

Published : Apr 13, 2019, 2:54 PM IST

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனை ஆதரித்து நடிகர் கார்த்திக் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், ’நடைமுறைக்கு சாத்தியம் இல்லாததை தேர்தல் அறிக்கையாக அரசியல் கட்சிகள் வெளியிடுகின்றன. யாரும் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் என்ற அடிப்படையில் பொய்யான வாக்குறுதிகளை தேர்தல் நேரத்தில் தருகிறார்கள்.

இதுபோன்று அரசியல் கட்சிகள் அறிவிக்கும் தேர்தல் அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் பதிவு செய்ய வேண்டும். ஐந்தாண்டுகள் நிறைவில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் கட்சியை அடுத்த தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது’ என பேசினார்.

இந்த பரப்புரை ஆரம்பிப்பதற்கு முன்பு அதிமுக-அமமுக தொண்டர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அமமுக தொண்டர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையின்போது காவல்துறைக்கும் அமமுக தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Intro:நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனை ஆதரித்து நடிகர் கார்த்திக் பேச்சு.

Body:நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனை ஆதரித்து நடிகர் கார்த்திக் பேச்சு.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.