ETV Bharat / city

National Lok Adalat: ஒரே நாளில் 4,800 வழக்குகளுக்கு சமரச தீர்வு

நெல்லையில் 2022ஆம் ஆண்டிற்கான முதல் மக்கள் நீதிமன்றம் லோக் அதாலத் ஒன்பது இடங்களில் நடைபெற்றதில் 4 ஆயிரத்து 800 வழக்குகளில் சமரச தீர்வு காணப்பட்டுள்ளன.

Lok Adalat
Lok Adalat
author img

By

Published : Mar 13, 2022, 1:00 PM IST

திருநெல்வேலி: நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க, உச்சநீதிமன்றம் முதல் தாலுகா நீதிமன்றங்கள் வரை 'லோக் அதாலத்' எனப்படும் 'மக்கள் நீதிமன்றம்' நடத்த டெல்லியில் உள்ள தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் ஆண்டுதோறும் நாடு முழுவதும் லோக் அதாலத் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில், இந்த ஆண்டிற்கான முதல் லோக் அதாலத், நேற்று (மார்ச் 12) நெல்லை மாவட்டத்தில் ஒன்பது இடங்களில் நடைபெற்றது.

நிலுவையிலுள்ள வழக்குகள்

நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற லோக் அதாலத் விசாரணையை மாவட்ட முதன்மை நீதிபதி நசீர் அகமது தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா முன்னிலையில் லோக் அதாலத் நடைபெற்றது.

ஒரே நாளில் 4,800 வழக்குகளுக்கு தீர்வு

நீதிபதிகள் தீபா, குமரேசன், விஜயகுமார், அமிர்தவேலு, இசக்கியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விசாரணை நடத்தினர். இதில் நெல்லை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், உரிமையியல் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், சமரசம் செய்யக் கூடிய குற்றவியல் வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

நெல்லை மாவட்டம் முழுவதும் மொத்தமாக, ஒரே நாளில் 3 ஆயிரத்து 356 வழக்குகள் மற்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத 22 வங்கிகள் சார்பில் 1,500 கடன் வழக்குகள் என மொத்தம் 4 ஆயிரத்து 856 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிற்பகல் வரை நடைபெற்ற லோக் அதாலத் விசாரணையில் பல்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50 லட்சம் வரை இழப்பீடு வழங்க தீர்வு காணப்பட்டது.

இதையும் படிங்க: 4 மாநிலங்களில் பாஜக வெற்றிக்கு காரணம் என்ன? - பழ.நெடுமாறன் பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.