திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி வள்ளியூர் ஒன்றியத்தில் உள்ள 18 ஊராட்சிகளைச் சேர்ந்த தொழில் முனைவோர்கள், மாற்றுத் திறனாளிகள், நலிவுற்றோர்களுக்கு மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தமிழ்நாடு ஊரக திட்டத்தின் கீழ் சிறப்பு நிதி உதவி தொகுப்பு 169 பேருக்கு 60 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி கருங்குளத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் இன்பதுரை கலந்துகொண்டு மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் தொழில் முனைவோர்கள் 169 பேருக்கு சிறப்பு நிதி உதவி தொகை வழங்கினார்.
பின்னர் இன்பதுரை எம்.எல்.ஏ பேசுகையில், "ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பங்களுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தை அறிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் மூலம் பெண்கள் கடனுதவி பெற்று சுய தொழில்கள் மூலம் வருவாய் ஈட்டி இந்த பேரிடரால் ஏற்பட்டிருக்கிற பொருளாதார நெருக்கடியை வெல்லலாம்" என்றார்.
இதையும் படிங்க: சோதனைச் சாவடியில் கையூட்டு வாங்கும் அலுவலர்கள்; சிசிடிவி பதிவில் கையும் களவுமாக சிக்கினர்