ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் ராஜலட்சுமி. சங்கரன்கோவிலை சேர்ந்த ராஜலட்சுமி அதிமுகவில் சாதாரண நிர்வாகியாக இருந்து, கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வென்று அமைச்சரானவர். அமைச்சராக இருந்தாலும் ராஜலட்சுமி பெரும்பாலும் பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை. இந்நிலையில் இன்று மணிமுத்தாறு அணையில் இருந்து பிசான சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைத்த அமைச்சர் ராஜலட்சுமி, செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, ஜெயலலிதா ஆசியாலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்கவும் தமிழகத்தில் அவர் ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை தண்ணீர் பஞ்சம் என்ற வார்த்தைக்கே இடமில்லை என்றார். இதைக் கேட்டு அருகில் இருந்தவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். அதாவது இயற்கையின் செய்கையான தண்ணீர் பஞ்சத்தை ஏதோ முதலமைச்சர் ஆணையிட்டு தடுத்துவிட்டதைப்போல அவர் பேசியதால் அருகிருந்தவர்கள் சற்று மிரண்டு போயினர்.
இதையும் படிங்க: கொடுக்கல்-வாங்கலில் தகராறு: பாஜக பெண் பிரமுகர் மீது வழக்குப்பதிவு