ETV Bharat / city

சசிகலா, டிடிவி அதிமுகவில் இணைய வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம்… மனோஜ் பாண்டியன் - நெல்லை விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன்

சசிகலா மற்றும் டிடிவி தினகரன் இருவரும் அதிமுகவில் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்து தொண்டர்களின் விருப்பத்தை ஓபிஎஸ் வெளிப்படுத்தியுள்ளதாக ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

பால் மனோஜ் பாண்டியன்
பால் மனோஜ் பாண்டியன்
author img

By

Published : Aug 20, 2022, 3:11 PM IST

நெல்லை: விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன் 251வது நினைவு தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டையில் உள்ள அவரது மணி மண்டபத்தில் அதிமுக ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினரும் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உத்தரவின் பெயரில் ஒண்டிவீரன் சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கிறோம் என்று தெரிவித்தார். செப்டம்பர் 1ஆம் தேதி பன்னீர்செல்வம் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தரும் போது அதிமுகவின் தொண்டர்கள் அனைவரும் அவரது பின்னால் தான் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் அவருக்கு வரவேற்பு அளிப்போம்.

சசிகலா மற்றும் டிடிவி அதிமுகவில் இணைய வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம்

சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்ற ஓ பன்னீர்செல்வம் மக்கள் மன்றத்திலும் வெற்றி பெறுவார். சட்டப் போராட்டம் என்பது முதல் படியாக வெற்றி பெற்றுள்ளோம் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பொறுத்திருந்து பாருங்கள் என்றும் தெரிவித்தார். உண்மையான அதிமுக ஓபிஎஸ் தலைமையில் தான் இருக்கிறது என்று கூறிய மனோஜ் பாண்டியன், ஓ பன்னீர்செல்வம் அழைப்பை எதிரிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்

ஜெயலலிதாவை பொதுச்செயலாளராக ஏற்றுக் கொண்ட அதிமுக தொண்டர்கள் ஓ பன்னீர்செல்வத்தை ஒருங்கிணைப்பாளராக ஏற்றுக் கொள்வார்கள் என்றும், தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டு ஓ பன்னீர்செல்வம் ஒவ்வொரு நகர்வையும் மேற்கொள்வார். எல்லோரும் ஒன்று சேர்வோம், அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும், ஒரே குடையின் கீழ் இருக்க வேண்டும் என்பதுதான் ஓ பன்னீர்செல்வத்தின் விருப்பம் என்றும், அதனால் தான் சேர்ந்து பணியாற்ற அழைப்பு விடுத்திருக்கிறார்.

சசிகலா மற்றும் டிடிவி தினகரன் இருவரும் அதிமுகவில் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்து தொண்டர்களின் விருப்பத்தை பன்னீர்செல்வம் வெளிப்படுத்தி இருக்கிறார் என்று மனோஜ் பாண்டியன் கூறினார்.

இதையும் படிங்க: எனது பாதுகாப்பை இழந்ததாக கருதுகிறேன்... நெல்லை கண்ணன் இறுதியஞ்சலியில் பங்கெடுத்த திருமாவளவன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.