ETV Bharat / city

தென்காசிக்கு ஆட்சியர் அலுவலகம் வருமா? வராதா? - தென்காசி

தென்காசி: புதிதாக மாவட்டம் உருவாகி ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடம் கட்ட இடத்தேர்வில் குழப்பம் நீடிப்பதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

collector
collector
author img

By

Published : Sep 25, 2020, 4:02 PM IST

தமிழ்நாட்டின் 35ஆவது மாவட்டமாக திருநெல்வேலியிலிருந்து தென்காசியை தனியாக பிரித்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் அரசு அறிவித்தது. இதில் தென்காசி, சங்கரன்கோயில் என இரண்டு வருவாய் கோட்டங்களும், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சதுரகிரி, வீரகேரளம்புதூர், சங்கரன்கோயில், திருவேங்கடம், ஆலங்குளம் ஆகிய 8 வட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

மாவட்டம் உருவாகியதன் முதல் மாவட்ட ஆட்சியராக அருண் சுந்தர் தயாளனும், காவல் கண்காணிப்பாளராக சுகுணா சிங்கும் பொறுப்பேற்றனர். பழைய பத்திரப்பதிவு அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகமும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அரசு உதவிபெறும் பள்ளியிலும் தற்காலிகமாக தற்போது இயங்கி வருகின்றன.

இந்நிலையில், புதிதாக மாவட்ட ஆட்சியர் கட்டடம் கட்ட தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை, இலத்தூர், ஆய்குடி, பாட்டக்குறிச்சி, ஆயிரப்பேரி உள்ளிட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

அதன்படி, அப்போதைய வருவாய் ஆணையர் ராதாகிருஷ்ணன், இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, ஆயிரப்பேரியில் அரசுக்கு சொந்தமான 35 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த இடத்தை சுற்றி விவசாய நிலங்கள், குளங்கள் இருப்பதால், ஆட்சியர் அலுவலக கட்டடம் அமைக்க அந்த இடம் உகந்தது அல்ல எனக்கூறி, திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் சிவ பத்மநாதன் மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். இதில் தலைமைச் செயலக செயலர், வருவாய்துறை கூடுதல் தலைமைச் செயலருக்கு விளக்கம் கேட்டு விசாரணையை அக்டோபர் 8ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்திலும், ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா, கடையநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் முகமது அபுபக்கர் ஆகியோர் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடம், விவசாய நிலத்தில் அமையக்கூடாது எனவும், அது ஆண்டிற்கு ஆறு ஏழு மாதங்கள் தண்ணீர் தேங்கும் பகுதி எனவும் சுட்டிக்காட்டினர். இதற்கு பதிலளித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், விவசாய நிலங்களில் அலுவலக கட்டடம் அமையாது என உறுதியளித்தார்.

தென்காசிக்கு ஆட்சியர் அலுவலகம் வருமா? வராதா?

இதையடுத்து தேர்வு செய்யப்பட்ட இடங்களை மீண்டும் ஆய்வு செய்த வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, இடத்தின் சாதக பாதகங்களை துறை அலுவலர்களிடம் கேட்டறிந்ததோடு, பொதுமக்களிடமும் மனுக்களை பெற்று சென்றுள்ளார். போக்குவரத்து வசதி இல்லாத ஆயிரப்பேரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரக்கூடாது எனவும், அனைத்து பகுதியில் இருந்தும் ஒரு மணி நேரத்தில் பயணிக்க கூடிய அளவில் நகர் பகுதியிலேயே அலுவலகம் அமைய வேண்டுமெனவும் தென்காசி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

புதிதாக மாவட்டம் உருவாகி ஓராண்டுக்கு மேலாகி, மக்களின் குறைகளை கேட்டறிந்து, மாவட்டத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டிய நேரத்தில், ஆட்சியர் அலுவலகத்திற்கான இடத்தேர்வு செய்யும் பணியே இன்னும் முடிவுக்கு வராத நிலையால், தென்காசி மாவட்ட மக்கள் குழம்பி போயுள்ளனர்.

இதையும் படிங்க: இரவில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் எண்கள் வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.