தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கரோனா கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு விதித்துள்ளது. இருப்பினும் கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்நிலையில், நெல்லையில் கூடங்குளம் அணுமின் நிலைய ஊழியர்கள் குடியிருப்பான அணுவிஜய் நகரியத்தில், ரஷ்ய விஞ்ஞானி ஒருவர் உள்பட 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அணுவிஜய் நகரியத்தை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்ற சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பான அணுவிஜய் நகரியத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ரஷ்ய விஞ்ஞானிகள் உள்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.