நெல்லை: பாளையங்கோட்டையில் உள்ள ராமசாமி கோயிலில் இன்று (செப்.4) உற்சாகமாக நடந்த 27ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவின் ஒரு பகுதியாக நேற்று ரத்ததானம் வழங்குதல் மரம் நடுதல், ஆதரவற்றவர்களுக்கு உணவளித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்ந்து சிறுவர்கள் கண்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டு கோலாட்டம் அடித்தபடி பாளையங்கோட்டை ரத வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். அப்போது ரத வீதிகளில் ஆங்காங்கே உறியடி நிகழ்ச்சிகளும் நடந்தன.
மேலும், ராமசாமி கோயில் திடலில் கிரைனில் தொங்கவிடப்பட்ட பானையை மனித பிரமிடு மூலம் இளைஞர்கள் போட்டி போட்டு உறியடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். தொடர்ந்து ஏராளமான இளைஞர்கள் மனித பிரமிடு அமைத்து உற்சாகமுடன் வழுக்கு மரம் ஏறினர். இதனை, ஏராளமாக பொதுமக்கள் உறசாகத்துடன் கண்டுகளித்தனர்.
இதையும் படிங்க: வெடிகுண்டுடன் விளையாடிய 4 குழந்தைகள் உயிரிழப்பு