திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை மன்னராஜா பகுதியைச் சேர்ந்தவர் அமராவதி பன்னீர் செல்வம். கணவனை இழந்த இவருக்கு, மூன்று மகள்கள் உள்ளனர்.
இவருடைய இரண்டாவது மகள் அபி, கல்லூரியில் படித்து வரும்போது அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரை காதலித்ததால், தாய் அமராவதி மகளை அடிக்கடி கண்டித்துள்ளார். மேலும், சந்தோஷ் உடனான காதலை நிறுத்தாவிட்டால் கல்லூரிக்கு அனுப்பாமல் வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு, காதலர் சந்தோஷ்வுடன், அபி சென்றுவிட்டதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அபி குடும்பத்தினர், திசையன்விளை பகுதிகளில் அபி படத்துடன் மகள் இறந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அச்சடித்து ஒட்டியுள்ளனர். இந்த சம்பவம் திசையன்விளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.