தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு காரணமாக மாநிலம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இங்கு தரிசனத்துக்குப் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
இதற்கிடையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கோயில்களையும் திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் இந்து அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் இந்து கோயில்களைத் திறக்கக்கோரி நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இந்து தேசிய கட்சியினர் இன்று (ஜூன் 17) திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் முன்பு தரையில் அமர்ந்து மண் சோறு சாப்பிட்டனர். பின்னர் அங்கிருந்த காவல் துறையினர் அவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.