ETV Bharat / city

மிளகாய்ப் பொடி தூவி இந்து முன்னணி நிர்வாகியை கொல்ல முயற்சி - இந்து முன்னணி துணைத்தலைவரால் தாக்கப்பட்டேன்

இந்து முன்னணி நிர்வாகி மீது அடையாளம் தெரியாத நபர்கள் மிளகாய்ப் பொடி தூவி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindu Party Official attacked severely in Tirunelveli

author img

By

Published : Feb 3, 2022, 7:05 AM IST

திருநெல்வேலி: இந்து முன்னணியின் திருநெல்வேலி மாவட்டத் துணைத் தலைவராக இருப்பவர் பால்ராஜ். இவர், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே அனவன் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர்.

இந்நிலையில், நண்பர் ஒருவருடன் பால்ராஜ் தனது கிராமத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அவரைப் பின்தொடர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென பால்ராஜ் மீது மிளகாய்ப் பொடி தூவி கொலைசெய்ய முயன்றுள்ளனர்.

நல்வாய்ப்பாக, பால்ராஜ் அந்த நபர்களிடமிருந்து தப்பி கூச்சலிட்டுள்ளார். கிராம மக்கள் திரண்டதும் தாக்கிய நபர்கள் தப்பிவிட்டனர். தகவலறிந்து வி.கே. புரம் காவல் துறையினர் நேரில் சென்று விசாரித்துவருகின்றனர். தேர்தல் நேரத்தில் இந்து முன்னணி நிர்வாகியை மிளகாய்ப் பொடி தூவி கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொலை: கூலித் தொழிலாளி கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.